தேவனோடு ஒரு தனிப்பட்ட அனுபவம் Chicago, Illinois, USA 54-0724 1மிக்க நன்றி. ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்கலாம். இரக்கமுள்ள எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு சிக்காகோவில், உம்முடைய அன்பான பிள்ளைகளோடு ஐக்கியம்கொள்ளும்படி கொடுத்த இந்நேரத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இங்கு அனேகர் உலகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் இவ்விதம் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கூடிவருகிறதற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அக்கரையிலே, உம்முடைய இராஜ்ஜியத்தில் ஒரு நாளில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கூடிவருவோம் என அறிந்திருக்கிறோம். அங்கே நாங்கள் ஒருபோதும் பிரியப் போவதில்லை. மேலும் பகல் என்று அழைக்கப்படுகிற இந்த பூமியிலே, நாங்கள் தாமே அவருடைய இராஜ்ஜியத்தை கட்டி எழுப்பும்படி முழுமையாய் ஒருங்கிணைந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசத்தை வைத்து செயல்படுவோமாக. கர்த்தாவே எங்களுடைய பாவங்களையும், உமக்கு விரோதமான அக்கிரமங்களையும் மன்னியும். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த ஆராதனையை அவருடைய கட்டுக்குள் எடுத்துக்கொண்டு மகிமையை எடுத்துக் கொள்வாராக. இதோ என் நாமத்தினால் பிதாவினிடத்தில் நீங்கள் வேண்டிக்கொள்வது எதுவோ, அதை செய்வேன் என்று எங்களுடைய கர்த்தரால் எழுதப்பட்டபடி, இன்று இரவிலே அவருடைய பிரசன்னமும், அவருடைய மகிமையும் எங்கள் எல்லோர்மேலும் நிழலிடுவதை நாங்கள் பார்க்கும்படி ஜெபிக்கிறேன். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 2என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கும், தேவனுடைய இராஜ்ஜியத்தின் பிரஜைகளுக்கும் என்னுடைய மாலை வணக்கம். நம்முடைய உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, இன்றிரவு உங்களுக்கு ஊழியம் செய்யும்படி இங்கு இருப்பதை குறித்து நாங்கள் மெய்யாகவே நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இங்கு நான் வருவதற்கு முன், கடைசி சில நிமிடங்களில், என்னுடைய இருதயம் சற்று வேகமாக துடித்துக்கொண்டிருந்தது. நான் இங்கு வந்ததும், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து கடல் கடந்து வந்த சில மக்களை சந்தித்தேன். அவர்கள், அன்றொரு இரவில் பரிசுத்த ஆவியானவர் எப்படியாக அவர்களுடைய ஜீவியத்தையும் அவர்களுடைய நிலைமைகள் எல்லாவற்றையும் அவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்கள் எவ்விதம் சுகத்தை பெற்றார்கள் என்பதை என்னிடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன்பின் நான் நேரடியாக உள்ளே நுழைந்தவுடன் “அவருடைய மகிமையிலிருந்து இறங்கி வந்தார்” என்ற அருமையான பாடலை கேட்டேன். என்னுடைய ஆத்துமாவை சிலிர்க்க வைக்கக்கூடிய ஒரு பாடல் இருக்கும் என்றால் அது “அவருடைய மகிமையிலிருந்து இறங்கி வந்தார்” என்ற பாடலே. தேவன் எவ்வளவாக தன்னுடைய உயர் நிலையை விட்டு, தன்னை தாழ்த்தி, கீழே இறங்கி, மாம்ச சரீரத்தில் தன்னை வெளிப்படுத்தி, கல்வாரியிலே ஒரு பாவியாகிய என்னுடைய இடத்தை எடுத்துக்கொண்டு எனக்கு பதிலாக மரித்து, நான் ஜீவவிருட்சத்தண்டை செல்லும்படியான உரிமையை எனக்கு கொடுத்து, அதை நான் புசித்து என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படி செய்தார். இதை எப்படி என்னால் தள்ளிப்போட முடியும்? இப்பேற்பட்ட அருமையான அழைப்பை எப்படி உங்களால் தள்ளிப் போட முடியும்? 3சுவீடனிலிருந்து கடல் கடந்து வந்த நம்முடைய சகோதரரை சந்திக்கும் பொழுது இப்படி இருக்குமானால் நாம் எல்லோரும் மகிமைக்கு சென்று, இங்கு நடக்கிற ஒவ்வொரு ஆராதனையிலும் நாம் சந்தித்த அருமையான மக்களை அங்கு காணும் போது எப்படியாக இருக்கும் என்று வியக்கிறேன். சகோ.ஜோசப் அவர்கள் என்னை அறிமுகம் செய்தபொழுது, அவர் என்மேல் அதிக அன்பு கொண்டிருந்ததால், என்னை குறித்து அதிகமாக பேசினார். (சகோ. பிரான்ஹாம் சிரிக்கிறார், பிறகு சகோ. போஸ், சகோ. பிரான்ஹாமிடம் பேசுகிறார்) நன்றி சகோதரனே, நன்றி சகோதரனே, நன்றி என் சகோதரனே. இவ்விதமான உணர்வை என் சகோதரனிலும் அல்லது எந்த நபர் கொண்டிருந்தாலும், அதை நான் ஒருபோதும் கறைபடுத்தமாட்டேன் என்று நம்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, என்னுடைய சகோதரரிடத்தில் அன்பும் ஐக்கியமும் கொண்டிருக்கும்படியான ஸ்தானத்தில் என்னை எப்பொழுதும் வைப்பாராக. ஏனெனில் நான் அவர்களை நிச்சயமாகவே நேசிக்கிறேன். அந்த உணர்வு இருபக்கமும் உணரப்படுகிறது. மேலும் நாங்கள் ஒன்றாய் இணைந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியம் செய்கின்ற உடன் வேலையாட்களாய் இருக்கிறோம். 4இப்பொழுது நாளை மதிய கூட்டமானது, இரண்டு மணியளவில் துவங்கும் என நினைக்கிறேன். சுவீடனிலிருந்து வந்திருக்கும் சகோதரன் நமக்கு பேசபோகிறார் என நினைக்கிறேன், மற்றும் நாளை இரவானது இந்த தொடர் கூட்டங்களின் கடைசி கூட்டமாக இருக்கும். ஏனெனில் நாளை இரவு என்னுடைய ஊருக்கு செல்லும்படி உடனடியாக புறப்பட்டு, திங்கட்கிழமை மதியம் இரண்டு மணிக்குகென்டகியில் இருக்கும் போர்ட் நாக்ஸ் (Fort Knox, Kentucky) என்ற இடத்தில், வெளிநாடு செல்வதற்கான தடுப்பூசிகளில் சிலவற்றை எடுக்கும்படி நான் அங்கே இருக்கவேண்டும். அவைகளெல்லாம் எனக்கு தேவையில்லை என கூறமுயற்சித்தேன். ஆனால் அவர்கள் எனக்கு செவி கொடுக்கமாட்டார்கள். என்னுடைய தோள்கள் மிகவும் நலிவுற்று இருக்கிறது, எனக்கு அவைகளெல்லாம் தேவையில்லை. ஆனால் சட்டமோ, நான் அவைகளை போட வேண்டும் என கூறுகிறது. ஆகவே வேதமானது “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்” என்று சொல்லுகிறது. நான் அந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கியாமல் இருப்பேனோ? இப்படி செய்கிறதினால், தேவனுக்குரியதை தேவனுக்கும், இராயனுடையதை இராயனுக்கும் செலுத்தப்பட்டிருக்கும். 5இப்பொழுது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார் என நான் நம்புகிறேன். ஒரு சில வார்த்தைகளை பேசும்படி ஒரு சில நொடிகள் மாத்திரமே எனக்கு உள்ளது. கர்த்தருக்கு சித்தமானால் நான் இங்கிருந்து திரும்புகையில், இன்றிரவு, இங்கு இருக்கும் சிக்காகோ மக்கள் அவர்களுடைய காதுகளில் இதை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். அதாவது என்னுடைய ஊழியத்தில் மக்கள் கண்டுபிடிக்க கூடிய ஒரே குறை என்னவெனில், ஒரே சமயத்தில் என்னால் அதிகமான மக்களுக்கு ஊழியம் செய்ய முடியாததே நல்லது. நிச்சயமாகவே, அவ்விதமாக இருந்தால், அதை செய்வதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருப்பேன். ஆனால் நான் ஊழியம் செய்யும் விதானத்தில் என்னால் அப்படி செய்ய முடியாது. அந்த நோக்கத்திற்காக இந்த ஊழியம் கொடுக்கப்படவில்லை. பொதுவாக நம்முடைய சகோதரர் திரு.ராபர்ட்ஸ் அவர்கள் ஐநூறு பேருக்கு ஜெபிக்கும் நேரத்தில் நானோ இரண்டு பேருக்கு மாத்திரமே ஜெபிப்பேன் என கூறப்படுகிறது. நல்லது அது உண்மை தான். தேவன் சகோ. ராபர்ட்ஸ் அவர்களை, என்ன செய்யும்படி கூறினாரோ அதை செய்கிறார். மற்றும் எனக்கு தேவன் என்ன கூறினாரோ அதையே நான் செய்தாக வேண்டும். அதுதான் வித்தியாசம். சபைக்கென்று ஆவியானவருடைய ஊழியத்தின் வேலைகள் வெவ்வேறாக இருக்கிறது. சகோ. ராபர்ட்ஸ் நிச்சயமாகவே விசுவாசத்தில் ஒரு நல்ல மனிதர். ஒரு அருமையான குணமுள்ளவர். அன்புள்ள சகோதரர். இன்னும் அதுபோன்று அநேகர் இன்று ஊழியக்களத்தில் இருக்கின்றனர். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால், எல்லோரும் உயர்ந்த இடத்தில் இருக்கிறதை போல நினைக்க தோன்றுகிறது. பார்த்தீர்களா இது அருமையானது. அவர்களுக்காக நான் எப்பொழுதும் ஜெபிப்பதுண்டு. 6இன்றைய ஊழியக்களத்தில் இருக்கும் இந்த பெரிய சுவிசேஷகர், நம்முடைய அன்பான சகோ. பில்லி கிரஹாம், ஒருவேளை தெய்வீக சுகமளித்தலைக் குறித்து என்னோடு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அன்றொருநாளில் தேசமெங்கிலும் ஒளிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர் சிறுநீரக அடைப்பினிமித்தம் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் பலவீனமாகி ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என கேள்விப்பட்டேன். அப்போது என் சகோதரன் மேலுள்ள பரிதாப உணர்வினால், அங்கேயே நின்று, தேவன் அவரை விடுவிக்கும்படியாக ஜெபம் செய்தேன். அதை தவிர வேறு எந்த உதவியும் என்னால் செய்யமுடியவில்லை. அவருக்கு இவ்வளவு நாட்கள் சிகிச்சை கொடுத்த பின் இப்பொழுது சுகம் பெற்று திரும்பவும் ஊழியம் செய்கிறார் என கேள்விப்பட்டேன். மக்கள் இரட்சிக்கப்படுவதற்கு, தேவன் நம்முடைய சகோதரனை வல்லமையும் மகத்துவமான வழியில் அவரை பயன்படுத்தி வருகிறார். நாம் நிச்சயமாகவே அவரை பாராட்டுகிறோம். மற்றும் இழந்து போனவர்களை இரட்சிக்கும்படியாக கர்த்தருடைய கரம் அவர் மீது இருக்கிறபடியால் கிறிஸ்தவர்கள் யாவரையும் நம்முடைய சகோதரருக்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். தேவன் தாமே அவரை முற்றிலுமாக விடுவிக்கும்படி வேண்டுகிறேன். அவர் இன்னும் பலவீனமாக உணருகிறார் என கேள்விப்படுகிறேன். தேவன் அவரை முற்றிலுமாக விடுவிக்கும்படியாக ஜெபிக்கிறேன். அதினிமித்தம் அவர் சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசங்கிக்கக் கூடும். அவர் சந்திக்கிற ஒருவகையான கூட்டத்தினர் அநேகமாய் என்னுடைய பிரசங்கத்தை கேட்கும்படி வரமாட்டார்கள். அவர்கள் நாட்டின் தூதர்களும், அது போன்றவர்களும் ஆவார்கள். அவர்கள் என்னுடைய பிரசங்கத்தை கேட்கும்படி வருவதற்கான ஒரே வழி என்னவென்றால் அவர்கள் சுகவீனமாயிருந்து முடியாமல் இருக்கும் நேரமே. அது மாத்திரமே ஒரே வழி. 7மற்றும் இராஜாக்களுக்கும், மன்னர்களுக்கும், வல்லுனர்களுக்கும் ஜெபிக்கும்படியான சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. தேவன் அவர்களை சுகமாக்கினாரேயன்றி அவர் ஒருபோதும் ஒன்றையும் கைவிட்டதாக நான் கண்டதில்லை. நம்முடைய ஐக்கிய தேச அரசாங்கத்தின் ஒருவரான காங்கிரஸ் உறுப்பினர் உப்ஷா (Upshaw) அவர்கள் அறுபத்தி ஆறு வருடமாக சக்கர நாற்காலியில் முடமாக இருந்து வந்தவர், சடுதியில் குணமானார். இந்த மனிதரை குறித்து என்னுடைய வாழ்வில் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. அவர் கூட்டத்தாரோடு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ன நடந்தது என்றும், என்ன நடந்துக் கொண்டிருந்தது என்பதையும் குறித்த தரிசனத்தை காண்பித்தார். அப்போது அவர் முற்றிலுமாக குணமடைந்தார். அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எத்தனை பேர் அவர் சுகம் பெற்ற காரியத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அநேகர் இங்கு இல்லை. நான் இங்கு ஒரு சிறு வேதவசனத்தை வாசித்து இதை உங்களுக்கு சாட்சியாக சொல்லப்போகிறேன். ஏனென்றால் பேசுவதற்கு எனக்கு வெறும் பத்து நிமிடம் மாத்திரமே உள்ளது. நான் நாளை இரவு பிரசங்கிப்பேன், ஆகவே நீங்கள் சீக்கிரமாக வாருங்கள். அப்போஸ்தலர் 2-ஆம்... அல்லது, 3-ஆம் அதிகாரம் ஒன்றாம் வசனத்திலிருந்து வாசிக்கலாம்: ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்தில் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள் அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்துசப்பாணியாய் பிறந்த ஒரு மனுஷனை சுமந்துகொண்டு வந்தார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சை கேட்கும் படிநாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கப் போகிற பேதுருவையும்யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்றுஅவர்களை நோக்கிப் பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி வலது கையினால் அவனைப்பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான் நடந்து, குதித்து, தேவனை துதித்தான். 8கர்த்தர் தாமே வாசித்த இந்த வேத பாகத்தோடு கூட தன்னுடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. அந்த நாட்களில், அந்த தேவாலயத்தில் இதுவே ஒரு மகத்தான நேரமாக இருந்தது. அப்போஸ்தலர்களுடைய இருதயம் முழுவதும் மகிழ்ச்சியினாலும் இன்பத்தினாலும் நிரம்பி இருந்தது. அவர்கள் அப்போதுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அனுபவத்தை புதிதாக பெற்று இருந்தார்கள். அவர்களுடைய இருதயம் முழுவதும் மகிழ்ச்சியினால் நிறைந்து இருந்தது. ஆ, ஏதோ ஒரு புதிதான காரியம் ஒன்று நடந்திருக்கிறது என்று நினைத்தார்கள். அநேக நாட்களாக அவர்கள் எதிர் நோக்கின பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவர் வந்துவிட்டார் என்று அறியும்படியாக உந்தப்பட்டார்கள். இப்பொழுது லூக்கா 24ம் அதிகாரம் 49-ம் வசனத்தில், இயேசு தன்னுடைய சீஷர்களிடத்தில், “நீங்கள்...அல்லது இப்படி கூறினார். நீங்களோ, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்துக்கொண்டிருங்கள் என்றார்”. மற்றும் அப்போஸ்தலர் 1-ம் அதிகாரம் 8-ல் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது. நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அவர்கள் மேல் இருந்த அந்த ஆசீர்வாதம் உலகத்தின் முடிவுபரியந்தமும் செல்ல வேண்டும் என அறிந்திருக்கிறோம். அது இன்றும் மாறாததாக இருக்கிறது. இரண்டாயிரம் வருடம் கழித்தும், நாம் இன்னும் அந்த (அதே) சுவிசேஷத்தை கொண்டு செல்லும்படி நமக்கு இப்பூமியில் மூன்றில் இரண்டு பங்கு மீதம் இருக்கிறது. இந்த வல்லமையின் செயல்பாடானது பூமியின் கடைசிப் பரியந்தமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 9இயேசு மகிமையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, தம்முடைய சீஷர்களுக்கு அவர் கூறின கடைசி வார்த்தைகளானது: “நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்றார். (இப்பொழுது இது முழு உலகத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.) விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், புதிய பாஷைகளிலே பேசுவார்கள், சர்ப்பம் கடித்தாலும், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும், அது அவர்களை சேதப்படுத்தாது. அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கும் போது, அவர்கள் சுகம் பெறுவார்கள்”. வேதத்தில், எபிரெயர் 13-ம் அதிகாரம் 8-ம் வசனத்தில், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்“; என்று எழுதப்பட்டிருக்கிறது. நம்மால் அதை மறுக்க முடியாது. ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தை. இதை நான் தட்டிக்கழிக்க கூடிய ஒரே வழி என்னவென்றால், என்னுடைய அவிசுவாசத்தை நான் நியாயப்படுத்த வேண்டும். ஆனால், நான் அதை பார்த்து அது வார்த்தையா இல்லையா என சொல்ல வேண்டுமானால், அது வார்த்தையே என்று சொல்லுவேன். மற்றும் இயேசு இந்த பூமியில் இருந்த பொழுது அவர் தன்னை ஒரு மிகப் பெரிய நபராக அழைத்துக் கொள்ளவில்லை.அவர் தன்னை ஒரு சாதாரண ஊழியக்காரனாக தாழ்த்திக் கொண்டார். அவர் தேவனுடைய குமாரனாக இருந்தும், தனக்கென்று எந்தப் புகழையும் எடுத்துக் கொள்ளவில்லை. 10அன்றொரு நாளில் இதை குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு செயற்கையான கையை செய்த மனிதன் தன்னை ஒரு பெரிய நபராக காட்டிக் கொண்டான். ஆனால் இயற்கையான கையை செய்த அந்த மனிதனோ தனக்கென்று எந்த ஒரு புகழையும் எடுத்துக்கொள்ளவில்லை. செயற்கையான கண்களை செய்தவனும் அதை செய்ததினிமித்தம் தன்னை ஒரு பெரிய நபராக காண்பிக்கிறான். ஆனால் உண்மையான கண்களை படைத்தவரோ தனக்கென்று எந்த ஒரு புகழையும் எடுத்துக் கொள்ளவில்லை. யேகோவா தேவன் தன்னை தாழ்த்தி, மாம்சத்தில் மறைத்து, நம்முடைய பாவங்களுக்காகவும், வியாதிகளுக்காகவும் தன்னை பலியாக கொடுக்கும்படி இறங்கி வந்தார். தேவனுடைய அன்பானது நினைக்க முடியாத அளவிற்கு ஆழமாகவும், தூய்மையும், எவ்வளவு ஐஸ்வரியமுமானது. தேவன் இவைகள் எல்லாவற்றையும் அவருடைய பகைஞர்களுக்கு செய்திருக்கிறாரானால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருக்கவேண்டும்? அவரை நேசிக்கிறஅவருடைய நேசமக்களுக்கு அல்ல அவருடைய பகைஞர்களுக்கு அவர் செய்திருக்கிறார். தேவன் தன்னுடைய பகைஞர்களை பாதாளத்திலிருந்து இரட்சிக்கும்படி மரிக்க சித்தம் கொண்டிருப்பாரானால், அவர் நிச்சயமாகவே தன்னுடைய பிள்ளைகளின் வியாதியை சுகப்படுத்த சித்தமுள்ளவராய் இருப்பார் என்று அநேக முறை சிந்தித்திருக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? அவர் தன்னுடைய பகைஞரைக் குறித்தே அவ்வளவு எண்ணமுடையவராய் இருப்பாரானால்... 11இப்பொழுது மிகவும் பரபரப்புள்ள இந்த ஆதி அப்போஸ்தலர்களுடைய காலத்தில், அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் ஒரு அனுபவத்தை பெற்றிருந்தார்கள். அவர்கள் ஏதோ ஒன்றை பெற்றிருந்தார்கள். இன்று அந்த அனுபவம் தான் நமக்கு தேவையாயிருக்கிறது. உதாரணத்திற்கு நாம் கலிபோர்னியா மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்கிறோம் என்றால், யாரோ ஒருவர் உங்களுடைய வாகனத்தை ஓட்டிக்கொண்டு போக வேண்டும். ஆகவே நீங்கள் நிச்சயமாகவே ஒருபோதும் காரை தன் வாழ்நாளில் இதுவரை ஓட்டாத ஓட்டுனரை தேர்வு செய்யமாட்டீர்கள். ஒரு அனுபவம் கொண்ட நபரையே தேடுவீர்கள். ஒரு வேளை நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றால் அல்லது ஒரு பல் சம்பந்தமான சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்குமானால், நீங்கள் நிச்சயமாகவே அதை குறித்து ஒன்றும் அறியாத ஒரு நபரை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவம் கொண்ட நபரையே தேர்ந்தெடுப்பீர்கள். அந்த விதமாகவே தான் நாம் தேவனைக் குறித்து பேசுகிற காரியமும் உள்ளது. ஆகவே நாம் தாமே இப்படிப்பட்ட அனுபவம் கொண்ட மக்களை அதாவது தாங்கள் என்ன பேசுகிறார்களோ அதை அறிந்திருக்கிறவர்களை பெற்றிருப்போமாக. இந்த அப்போஸ்தலர்களுக்கு பெந்தெகொஸ்தேயின் அனுபவம் இருந்தது. அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு தெய்வீக சந்தோஷம் இருந்தது. மற்றும் அவர்களுடைய இருதயம் முழுவதும் பொங்கினது. முழு உலகமும் அவர்களுக்கு சொந்தமாய் இருந்தது. அன்று அவர்கள் ஒருவிசை கொண்டிருந்த அந்த சந்தோஷம், அந்த தெய்வீக சந்தோஷத்தை இன்றிரவிலே நாம் இழந்திருப்பது மிகவும் மோசமாக இருக்கவில்லையா? அவர்கள் அந்நாளிலே கொண்டிருந்ததான அந்த அனுபவம் இந்த உலகத்திற்கு எவ்வளவு தேவையாயிருக்கிறது என நான் எண்ணுவதுண்டு. 12இப்பொழுது, முற்செடியண்டையில் இருந்த மோசேயைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறோம். இந்த ஆடு மேய்ப்பவன், தான் அநேக முறைநடந்து சென்ற அதே பாதையில், ஓர் நாள் காலையில் அவன் நடந்து சென்றபோது; ஒரு எரிகிற முட்செடியினால் கவர்ந்து இழுக்கப்பட்டான். அதன் பிறகு அந்த எரிகிற முட்செடிக்குள் கர்த்தருடைய தூதன் இருக்கிறதைக் கண்டான். அவர் மோசேயுடன் பேசினார். மோசே கடும் தோல்வியுற்றவனாக இருந்தான். தேவன் அவனை கொண்டு இஸ்ரவேல் மக்களை விடுவிக்கப் போகிறார் என அறிந்து, தன்னுடைய சுய முயற்சியில் நாற்பது வருடங்கள் முயன்று, தோல்வியடைந்து, அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் என்ற வெற்றியின் தரிசனத்தை முழுவதும் இழந்தவனாக இருந்தான். சபையாகிய நாமும் கூட, தேவன் சபையை அதினுடைய பாவத்திலிருந்தும், வியாதியிலிருந்தும் விடுவித்து, இந்த பூமியிலுள்ளவர்கள் நம்மைக் காணும்போது அவர்கள் பசிதாகமுள்ளவர்களாகும்படிக்கு நம்மை ஒரு சாரமுள்ள மக்களாக வைப்பார் என்று வாக்களித்திருக்கிறார் என அறிந்திருக்க, நாம் ஏன் நம்முடைய மனித முயற்சிகளோடும், நம்முடைய வேததத்துவங்களோடும், நம்முடைய பெரிய கட்டிடங்களை கொண்டும், இது போன்ற காரியங்களைக் கொண்டும் செய்யவேண்டும் என சில நேரங்களில் நான் வியப்பது உண்டு. அநேக வருடங்களுக்கு முன்பாக நாம் இவைகளின் மூலம் மக்களுக்கு அளிக்க முயற்சித்து தோல்வியில் முடிந்தது என கண்டோம். ஏனென்றால்; நாம் அதை செய்யும்படி அவைகளை நம்மீது எடுத்துக்கொண்டோம். நாம் நம்முடைய ஊழியக்காரர்களை பயிற்சிவிப்பதற்காகவும் மற்றும் இதுபோன்றவற்றை செய்ய புதிய பள்ளிகளை எழுப்பும்படி நம்மீது நாம் எடுத்துக்கொண்டோம். நாம் உண்மையான முறைமையை விட்டுவிட்டோம். நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய உண்மையான காரியம் என்னவென்றால் சபையை வழிநடத்தும்படி பரிசுத்த ஆவியானவரிடத்தில் விட்டுவிடுவதே என்று தேவன் சொன்னார். ஆனால் நாமோ அதை விட்டுவிட்டோம். நாம் நம்முடைய தெய்வீக சந்தோஷத்தை இழந்துவிட்டோம். நம்முடைய தரிசனம் இப்பொழுது மங்கினதாய் இருக்கிறது. மக்கள் கர்த்தருடைய வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லை. இருப்பினும் அணுகுண்டுகள் உலகத்தை ஒரே சமயத்தில் அழிப்பதற்காக எல்லா இடங்களிலும் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களோ தேவனைக் குறித்த தரிசனத்தை இழந்துபோனவர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில் கர்த்தரின் வருகை இந்த (ஓர்குறிப்பிட்ட) நேரத்தில் தான் இருக்கும் என்று தாங்களாகவே காலத்தை நிர்ணயித்து விட்டார்கள். அவர்கள் அநேக காரியங்களை தாங்களாகவே செய்யும்படி முயற்சித்து செய்கிறார்கள். நாம் நம்முடைய காரியங்களை தளரவிட்டு, தேவன் காரியங்களை செய்யும்படி நாம் அனுமதிக்கவேண்டும். பரிசுத்த ஆவி இல்லாமல் நம்மால் எப்படி இந்த காரியங்களை செய்ய முடியும்? இப்பொழுது, மோசே கடும் தோல்வியுற்றவனாக இருந்தான். அவனுடைய கவனம் அந்த முற்செடியண்டை இழுக்கப்பட்டதை நாம் காண்கிறோம். அவன் அந்த முட்செடிக்கு அருகே சென்று, அதினுள் என்ன பிரச்சனை இருக்கிறது எனக்கண்டு அறிய போனான். அதற்கு அருகாமையில் நெருங்கும்படி நடந்து போய்க் கொண்டிருந்தான். அக்கினி எப்பொழுதும் கவர்ச்சியை கொண்டுவரும். வழக்கமாக பரிசுத்த ஆவி அக்கினியாக வரும்பொழுது அது மக்களின் கவனத்தை கவர்ந்து இழுக்கும். அங்கே அக்கினியினால் அந்த மரம் எரியாமல் இருப்பது என்ன என்று காணும்படி அப்பக்கமாய் மோசே திரும்பினான். அப்போது தேவன் ஒரு தூதன் மூலம் ஒரு புதிய தரிசனத்தை கொடுத்தார். 13இப்பொழுது கவனியுங்கள், விசுவாசமானது அதை சரியாக பிடித்துக்கொண்டது. பழையவைகள் ஒழிந்து போயின. மோசே இப்பொழுது புதிய தரிசனத்தை பெற்றிருக்கிறான். அவன் ஒரு வெளிப்பாட்டை பெற்றிருந்தான். அவனுக்கு ஒரு அனுபவம் இருந்தது. அவன் தேவனை சந்தித்திருந்தான். அவன் தேவனோடு பேசியிருந்தான். இதற்கு முன்பாக அவன் தேவனை சந்தித்ததில்லை. அவன் தன் தாய் அல்லது தன் போதகர் என்ன கூறினார்களோ அதைக் கேட்டும் மற்றும் அவைகளைக் வாசித்ததின் மூலமாகவும் மாத்திரமே அறிந்திருந்தான். ஆனால் இப்பொழுதோ மோசேக்கு ஒரு தனிப்பட்ட அனுபவம் இருக்கிறது. இன்றிரவிலே சபைக்கு அதுதான் தேவையாயிருக்கிறது. வேத பாண்டித்தியத்தை படிப்பதை நிறுத்திவிட்டு, பலிபீடத்தண்டையில் முழங்காலிட்டு மனித இருதயத்தில் ஒரு தனிப்பட்ட அனுபவம் கொழுந்துவிட்டு எரிந்து, மங்கி கிடக்கும் காரியங்கள் எல்லாவற்றையும் எரித்துவிட்டு, ஒரு புதிய தரிசனத்தை கொடுக்குமட்டும் அங்கேயே ஜெபிக்கவேண்டும். 14இப்பொழுது, மோசே ஒரு அனுபவம் வாய்ந்தவனாய் இருக்கிறான்.அவன் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையை சாட்சியாகக் கண்டான். அவன் தெய்வீக சுகமளித்தலையும் சாட்சியாக கொண்டிருந்தான். அவனுடைய கை குஷ்டரோகத்தினால் தாக்கப்பட்டிருந்தது. அவன் தன் கையை தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும் போது, அது சுகமானது. தேவன் சுகமளிப்பவர் என்றும் அவனோடு அவர் இருக்கிறார் என்றும் மற்றும் தனிப்பட்ட விதத்தில் தன்னை அவனுக்கு வெளிப்படுத்திக் கொண்டார் என்றும் அறிந்திருந்தான். அந்த விதமாகத் தான் 'என்னிடத்திலுள்ளதை உனக்கு தருகிறேன்“ என்று சொன்ன இந்த அப்போஸ்தலன் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தார். இன்றிரவிலே நமக்கு அவ்விதமான தேவனோடு ஒரு தனிப்பட்ட அனுபவம் தான் தேவையாயிருக்கிறது. மோசேக்கு அந்த தனிப்பட்ட அனுபவம் உண்டாயிருந்தது. இப்பொழுது விசுவாசம் குதித்து வருகிறதை கவனியுங்கள். மோசேக்குள் இருக்கும் வித்தியாசத்தை இப்பொழுது கவனியுங்கள். அவன் எகிப்திற்கு அவைகளை ஜெயிக்கும்படி, “ஒரு நபர்” படையெடுப்பாக கடந்துபோனான். அவனுடைய கையில் காய்ந்த கோலைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அவன் சென்று தேவன் அவனுக்கு என்ன செய்யச் சொன்னாரோ அதை அவன் செய்து நிறைவேற்றும்படி அதினோடே கடந்து சென்றான். ஏனெனில் அவன் தேவனிடத்திலிருந்து ஒரு புதிய தரிசனத்தைப் பெற்றிருந்தான். இன்று சபைக்கு ஏதாவது ஒரு தேவை இருக்குமானால், நண்பர்களே‚ நாங்களும் அதை தான் செய்ய முயற்சிக்கிறோம். தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அவர் ஆளுகை செய்து, தன்னுடைய சபையோடு நகர்ந்து செல்கிறார் என்று மக்கள் காணும்படியாக தேவனுடைய பிரசன்னத்திலிருந்து ஒரு தரிசனத்தை கொண்டுவரவேண்டும். இயேசு வந்து அதை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் அவன் அங்கேயே தரித்திருப்பான். ஒரு தரிசனம், ஒரு அனுபவம்... 15ஒருமுறை, தாவீது என்ற பெயருடைய ஒரு சிறுவன், தன் சகோதரர்களுக்கு அப்பங்களையும் காய்ந்ததிராட்சையையும் கொடுக்கும்படி அவர்கள் இருக்கும் இராணுவத்திடம் சென்றான். அப்போது அங்கிருக்கும் அந்த குன்றின் அடுத்த பக்கத்தில் இருக்கும் ஓடையருகில் ஒரு மகா பெரிய இராட்சதனான கோலியாத் என்ற பெயருடையவன் நின்று தன்னை தற்பெருமையடித்துக்கொண்டு இஸ்ரவேலை நகைத்துக் கொண்டிருந்ததை காண்கிறோம். அங்கே அவர்களோ விசுவாசத்தை இழந்தவர்களாக, தேவனோடு கொண்டிருந்த அனுபவத்தை இழந்தவர்களாக இருந்ததை காண்கிறோம். அவர்கள் எல்லோரும் அமைதியாக இருந்தனர். ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் எல்லோரும் அந்த பெரிய இராட்சதனை குறித்து பயந்து போயிருந்தார்கள். ஆனால் தன்னுடைய தற்பெருமையை, தேவனை விசுவாசிக்கும் ஒருவனின் காதில்விழும்படி செய்தான்;. அது அந்த சின்ன தாவீதாகும். ஒரு சிறிய ஆட்டு தோலினால் ஆன ஆடையை அணிந்துக்கொண்டு, சிவந்த மேனியுடைய ஒரு சிறுவனாக அவன் இருந்திருக்கக்கூடும். அவன் ஓடிப் போய், “நான் போய் அந்த எதிரியோடு சண்டையிடட்டும். ஜீவனுள்ள தேவனுடைய சேனையாகிய நீங்கள் மௌனமாய் இருந்து அந்த விருத்தசேதனம் செய்யாத பிலிஸ்தியன் தேவனுடைய சேனையை வீழ்த்துவான் என்று கூறுகிறீர்களா?” என்றான். அவன் தன்னுடைய சகோதரர்களை அவமானப்படுத்தினான். நமக்கு இன்றைக்கு தேவை என்னவெனில் தாவீதை போல் அனுபவமிக்க ஒருவன் எழும்பி “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன, இயேசுவின் இரத்தம் ஆயிரத்திதொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே காய்ந்துபோய்விட்டது, ஆகவே நமக்கு தேவையெல்லாம் ஒரு சபையில் சேர்ந்து கொள்வதுதான் என்று புருஷர்களும் மற்றெல்லா மக்களும் சொல்லும்படி அனுமதிக்கவேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?” என்று சொல்லக்கூடியவனே தேவை. 16மறுபடியுமாக மக்களை கர்த்தருக்குள் ஜீவிக்கிற விசுவாசத்திற்கு திருப்பும் அந்த அருமையான பண்டையக்கால தூய பவுலின் எழுப்புதலும் மற்றும் பெந்தெகோஸ்தே நாளில் கொடுக்கப்பட்ட பரிசுத்தாவியின் ஞானஸ்நானமே இன்று நமக்கு தேவை. அது சரிதான். “நான் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன்”; என்று எழும்பி அறிக்கையிடுகிறதை விசுவாசிக்கிறேன். அது நல்லதுதான். அவைகள் எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நண்பர்களே, நமக்கு அதை காட்டிலும் மேலான ஒன்று தேவை. ஆபிரகாம் விசுவாசத்தினால் தேவனை நம்பினான்.அவனுடைய விசுவாசம் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கு முத்திரையாக விருத்தசேதனத்தைக் கொடுத்தார். மற்றும் நீங்கள் தேவன் மேல் விசுவாசம் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவீர்களானால் உங்களுடைய விசுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில்; அவர் உங்களுடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார் என்று உறுதிப்படுத்தும் வகையில், சரியாக அங்கேயே பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை உங்களுக்கு தர அவர் கடமைப்பட்டிருக்கிறார். ஆமென். அது சரிதான். 17இப்பொழுது கவனியுங்கள். அந்த இராட்ஷசனோடு சண்டையிட போகும்படி சிறிய தாவீது தயாரான பொழுது, அந்த இராஜா அவனுடைய தைரியத்தை பார்த்து ரசித்தான் என்று நினைக்கிறேன் “இப்பொழுது மகனே நான் உன்னுடைய தைரியத்தை மெச்சிக் கொள்கிறேன். ஆனால் நீ ஒன்றை நினைவில் கொண்டிருக்க வேண்டும். நாம் இப்பொழுது மோசேயின் நாட்களில் ஜீவித்துக்கொண்டிருக்கவில்லை. அவைகளெல்லாம் கடந்து போன நாட்களிலே நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் பரவாயில்லை நீ இங்கே வா நான் உனக்கு போராயுதங்களை உடுத்துவிக்கிறேன்” என்று சொன்னான்.அதன் பிறகு அவன் தன்னுடைய சொந்த போர்கவசத்தை எடுத்து அந்த சிறுவனாகிய தாவீதுக்கு உடுத்துவித்தான். மேலும் அவனுடைய கையில் அவனுடைய கேடயத்தையும், மற்றும் ஒரு மிக பெரிய கவசத்தையும் கொடுத்தான். அது தாவீதை கிட்டத்தட்ட கீழே தள்ளுகிற அளவிற்கு அதிக எடை உள்ளதாக இருந்தது. அதற்கு தாவீது, “இவையெல்லாவற்றையும் என்னிடத்திலிருந்து எடுத்துவிடுங்கள். நான் இவைகளை ஒரு போதும் முயற்சித்ததில்லை. நான் அதை சோதித்ததில்லை. இவை என்ன என்று எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான். ஆனால் அவன் ஒரு காரியத்தை பெற்றிருந்தான். அது கவண் கயிரோடு உண்டான ஒரு தனிப்பட்ட அனுபவம். அந்த கவண் கயிற்றுக்குள்ளும்; தேவன் இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். அதுவே அவனுக்கு தேவை. 18சவுலின் மதசம்பந்தமான உடையானது தேவனுடைய மனிதனுக்கு பொருந்தவில்லை என சவுல் கண்டு பிடித்தான். அது அவனை கீழே தள்ளுகிற அளவிற்கு அதிக பளுவாக இருந்தது. நான் நாடு கடந்து பெரிய சபைகளின் மற்றும் அதுபோன்று பெரிய இடத்தில் நிற்கிற பிரசித்தி பெற்ற மனிதர்களை சந்திக்கும்போது இதுவே அநேகருடைய பிரச்சனையாக இன்றைய நாளில் இருக்கிறதைக் காண்கிறேன். அவர்கள் இந்த விடுதலையின் செய்தியை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் செய்தியையும் அவருடைய வல்லமையையும் விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவருடைய சபையை மிஞ்சி எதையும் பார்க்கக்கூடாதபடிக்கு சபை ஸ்தாபனங்களின் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அதற்கு மிஞ்சி போகும்படி அவர்களும் அனுமதிக்கமாட்டார்கள். இன்றைக்கு நமக்கு தேவை என்னவென்றால், தாவீதை போன்று கவணின் கொஞ்சம் அனுபவம் கொண்டு எழும்பி வருகிற நபரே தேவை. தாவீது அவனிடத்தில், “உம்முடைய வேதபாண்டித்தியம் எனக்கு தெரியாது. அதாவது இந்த பட்டயங்கள் மற்றும் அது போன்றவைகள் குறித்து ஒன்றும் தெரியாது. ஆனால் உம்முடைய ஊழியக்காரனாகிய நான், இந்த கவண்கல்லைக் கொண்டு ஒரு அனுபவம் அங்கே எனக்கு உண்டாயிருந்தது. அதை வைத்து ஒரு சமயம் சிங்கத்தை கொல்லும்படி தேவன் உதவினார். மேலும் அதை வைத்து ஒரு கரடியையும் கொன்றேன். நான் இதைவைத்து ஒரு சிங்கத்தை கொல்லும்படி அவர் என்னை அனுமதித்திருப்பாரானால், நிச்சயமாகவே விருத்தசேதனம் இல்லாத அந்த பிலிஸ்தியன் இந்த மத்திய வேளையில் என்னுடைய கையில் இருக்கிறான்”.தேவனே‚ இந்த விதமான சிவந்த அனுபவம் கொண்டிருக்கிற சிவந்த பையன்களை அதிகமாய் தாரும்.அவர்கள் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டு, அவர் சொல்லுகிற எல்லாவற்றையும் அது உண்மை என்று விசுவாசிப்பார்கள். ஆமென். என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களே அது தான் இன்றைய இரவின் தேவையாயிருக்கிறது. இப்பொழுது நீங்கள் இதை கவனிக்கும்படி கேட்கிறேன். தேவன் அவனோடு இருந்தார் என்ற நிச்சயத்துடன் அவன் புறப்பட்டான். ஏனெனில் அவனுடைய கவண்கல்லைக் கொண்டு தேவன் அவனுடைய கையில் இந்த எதிராளியை கொடுப்பார் என்ற அனுபவத்தை கொண்டிருந்தான். 19ஒரு சமயம் சிம்சோன் என்ற பெயர் கொண்ட ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் சுருட்டை முடி கொண்டவன் போல் இருந்தான். ஓவியர்கள் சில நேரங்களில் அவன் கதவு சுமக்கிற படத்தை வரையும் பொழுது, இந்த அரங்கத்தை விட பெரியவனாக வரைந்திருந்ததை கண்டேன். அப்படிப்பட்ட ஒரு நபர் பட்டணத்தின் கதவுகளை எடுத்துக்கொண்டு நடப்பானாகில், அதில் எந்த ஒரு மர்மமும் இராது. அப்பேற்பட்ட உருவம் கொண்ட ஒரு மனிதன் தன் கரங்களினால் ஒரு சிங்கத்தை கொன்று போடுவான் என்றால் அதில் எந்த மர்மமும் இராது. அவர்கள் தவறான கோணத்தை கொண்டிருக்கிறார்கள். சிம்சோன் ஒரு சின்னஞ் சிறு பையன். சுருட்டை முடியுடையவன். ஒரு பெண்தன்மை கொண்டவனாக தலையில் ஏழு ஜடைமுடி தொங்கிக்கொண்டிருக்கும். அவன் பார்ப்பதற்கு ஒரு சாதாரண புருஷனாக இருந்தானேயன்றி வேறு எவ்விதமாகவும் தோற்றமளிக்கவில்லை. ஆனால் தேவனுடைய ஆவி அவன் மேல் வந்தபோது, அது சிங்கமோ அல்லது எதுவாக இருந்தாலும் சரி அதை அவனால் கொல்ல முடிந்தது. அது தேவனுடைய ஆவியைக் கொண்டு செய்ய முடிந்தது. ஒரு நாள் அவனை ஓராயிரம் பிலிஸ்தியர்கள் ஒரு குன்றின் அருகே அவனை சூழ்ந்து தாக்க வந்தார்கள். அப்போது அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு பழைய காய்ந்த கோவேறி கழுதையின் தாடை எலும்பை எடுத்து தன்னுடைய ஏழு ஜடைகள் இன்னும் இருக்கின்றதா என்று பார்த்துவிட்டு, அவர்களை தாக்கும்படி தீவிரமாய் ஓடி ஆயிரம் பிலிஸ்தியர்களை கொன்றான். அவர்களை கொல்லும்படி அவனிடத்தில் வேறொன்றும் இல்லை. அவன் அவர்களிடத்தில் “உங்களுக்கு கொடுப்பதற்கு (உங்களை கொல்லுவதற்கு) என்னிடத்தில் இந்த தாடை எலும்பைத்தவிர வேறொன்றுமில்லை. ஆகையால் இதைக் கொண்டு உங்களை கொல்லுகிறேன்” என்றான். அன்று ஆயிரம் பிலிஸ்தியர்களை கொன்றான். இன்று நமக்கு தேவையெல்லாம் தேவனுடைய காரியத்தில் உண்மையாய் ஈடுபடுகிற சில நபர்களே. 20ஒரு முறை நான் ஒரு ஆராதனையை கொண்டிருக்கும்படி கால்பந்து விளையாட்டு மைதானத்திற்குள் போய்க் கொண்டிருந்தேன். அங்குள்ள வாசலில் எழுதியிருந்த வாசகத்தை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. அதில் “ஒரு சண்டையில் நாயின் உருவம் எவ்வளவு பெரியதாய் இருக்கிறது என்பது காரியமல்ல. ஆனால் நாயிக்குள்ளாக இருக்கும் சண்டை எவ்வளவு பெரியதாய் இருக்கிறது என்பது தான் காரியம்” என்று எழுதியிருந்தது. இன்றைக்கு இவ்வளவு தைரியமும் முதுகெலும்பும் கொண்ட நபரே நமக்கு தேவை. உனக்கு எந்த ஸ்தாபனமில்லை என்றாலும் பரவாயில்லை. நீ வேதபாண்டித்தியம் (D.D.) அல்லது நீ வேறு எதையும் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. நீ ஜீவனுள்ள தேவனுடைய கலப்படமில்லாத வார்த்தையை பிரசங்கித்து அதை காத்துக்கொள்ளும் பட்சத்தில் நீ இயேசு கிறிஸ்துவை உன் பக்கமாய் பெற்றிருக்கிறாய். தேவன் அதை ஆதரிப்பேன் என வாக்களித்திருக்கிறார். அது முற்றிலும் உண்மையே. நியாயாதிபதிகளின் நாட்களிலே சம்கார் என்னும் பெயர் கொண்ட சிறுவனை நினைவுகூருகிறேன். அவன் ஒன்றும் கொண்டிருந்ததில்லை. அவன் ஒருபோர் வீரனும் அல்ல. எப்படி சண்டை போட வேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியாது. பிலிஸ்தியர்கள் உள்ளே வந்து அவர்கள் கொண்டிருக்கிற எல்லாவற்றையும் சூறையாடிப்போவதுண்டு. அவர்கள் எப்பொழுதாவது ஏதாவது ஒன்றை கட்டி கொஞ்சம் பொருள்களை சேகரிப்பார்களானால் உடனே பிலிஸ்தியர்கள் வந்து அவைகளை சூறையாடிப் போய்விடுவார்கள். அவ்விதமாகத்தான் இன்றைக்கும் நம்முடைய எழுப்புதல் கூட்டங்களில் நாம் சரியாக செய்து கொண்டு வருகிறோம். நாங்கள் கூட்டத்திற்கு சென்று அங்கே எழுப்புதலை துவங்கி இருப்போம். சுவிசேஷகர் போன உடனே அல்லது மக்கள் பிரிந்து போன உடனே, பிலிஸ்தியன் உள்ளே நுழைந்து “கேளுங்கள், அற்புதங்களின் நாட்கள் கடந்து போயின. அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை. அது வெறுமனே மனோதத்துவம் தான். அதுவெறும் மற்றவருடைய உள்ளத்தை ஆராய்ந்து படிப்பது தான் என்று அது போன்ற காரியங்கள் தான்” என்பார்கள். 21அந்த சிறிய சம்கார் அங்கே தெருவை நோக்கி நின்றுகொண்டிருக்கையில், பிலிஸ்தியர்கள் வீரநடை போட்டுக்கொண்டு வந்ததை என்னால் காணமுடிகிறது. அவன் ஒரு போர் வீரன் அல்ல.அவனுக்கு சண்டை போடுவதை குறித்து ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றை மாத்திரம் அவன் அறிந்திருந்தான். அவன் ஒரு யூதன் என்றும், அவனுக்கு உரிமை இருக்கிறதென்றும், அவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டவன்; என்றும் தேவன் அவனோடு இருக்கிறார் என்றும் அறிந்திருந்தான். ஆகையால் அவன் அங்கிருந்த ஒரு காளையின் தாற்றுக் கோலை எடுத்துக்கொண்டான். அது மாத்திரமே அவனிடத்தில் இருந்தது. அதை வைத்து அவன் அறுநூறு பிலிஸ்தியர்களை அடித்தது உண்மையே. அவன் கையில் இருந்த இந்த காளையின் தாற்றுக்கோலைக் கொண்டு, போர்கவசமிட்டிருந்த யாவரையும் கொன்று போட்டான். ஏனெனில், அவன் சரியான ஒன்றின் மேல் அடியெடுத்து வைத்து, தேவனை விசுவாசித்தான். இன்றிரவிலே நமக்கு தேவை என்னவெனில், இது போன்ற சில சம்கார்களே. அது சரிதானா? தேவனுடைய வார்த்தையை எடுத்து, பயம் இல்லாமல் அது உண்மை என்று கூறுகிறவரே தேவை. அப்பொழுது தேவன் தன்னுடைய வார்த்தைக்குப் பின் நிற்பார். அவர் அதற்காக கடமைப்பட்டிருக்கிறார். 22ஓ‚ நான் இந்த வேதாகம வீரர்களை சிந்தித்துப்பார்க்கும் போது, சில நாட்களுக்கு முன்பு இங்கு நடந்த காரியம் ஒன்று என் நினைவிற்கு வருகிறது. நான் இங்கிருக்கிற மலைகளிலே இருந்த போது, வாத்துக்கள் தண்ணீரில் முழுவதுமாக நிரம்பி நீந்திக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். முதன் முறையாக குளிர் காற்று வீசினவுடனே, அந்த வாத்துக்கள், ஹாங், ஹாங், என்று இரண்டு மூன்று முறை சத்தமிட்டு அவைகளால் முடிந்த மட்டும் துரிதமாக அங்கிருந்து கடந்து லூசியானாவிலுள்ள நெல் வயல்களுக்கு செல்ல தொடங்கிவிடும். அவ்விதம் செய்யும்படி அவைகளுக்குச் சொன்னது எது? அவைகள் எந்த வேதபாண்டித்தியமும் பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை. அது முற்றிலுமாக வாத்தாகவே பிறந்திருக்கிறது. அது வாத்தாக இருக்கும் பட்சத்தில், இயல்பாகவே அதற்குள் அந்த உள்ளுணர்வு இருக்கிறது. அது வாத்தாக இருக்கிறதினால், அதினுடைய உள்ளுணர்வானது “குளிர் காலம் வருகிறது ஆகையால் இங்கிருந்து கடந்து வெது வெதுப்பாய் இருக்கிற நல்ல நிலத்திற்கு போக வேண்டும்” என்று அதற்கு நன்றாகவே தெரியம். நல்லது ஒரு வாத்தானது வாத்தாக இருப்பதினால் அவ்விதமாக செய்யும் என்றால், தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த மனிதன், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு அவன் எப்படியாக செய்ய வேண்டும்? அவனுக்கு தொல்லை வரும் முன்னரே, அவன் அதை அறிந்து, தேவனை பற்றி பிடித்து, அவனுடைய விசுவாச இறக்கைகளை அடித்து அவ்விதமான காரியத்திலிருந்து விலகியிருப்பான். நீங்களும் உங்களுடைய வியாதியை விட்டு கடந்துபோவீர்கள். உங்களை சங்கிலிகளினால் முடக்கிப் போட்ட சூழ்நிலைகளிலிருந்து கடந்துபோவீர்கள். இவ்விதமான காரியங்கள் எல்லாவற்றிலிருந்து கடந்து போவீர்கள். மேலும் இவ்விதமான காரியங்களை செய்யும்படி தேவன் கடந்து போக வேண்டிய நேரம் இதுவே. மற்றும் நமக்கு கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தை கொடுத்து, நம்மை ஆசீர்வதித்து நமக்கு வல்லமை தந்து, சபைக்கு மகத்தான காரியங்களை எந்த நாளிலும் செய்வார். தேவன் அதை செய்வேன் என வாக்களித்திருக்கிறார். 23தேவன் “கடைசி நாட்களில் உன்னதத்திலிருந்து அவருடைய ஆவியானது ஊற்றப்படும், அப்போது பூமியின் மேல் தரிசனங்களையும், அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பிப்பேன்” என கூறினார். இந்த எல்லா காரியங்களையும் தேவன் செய்வேன் என வாக்களித்திருக்கிறார். அவர் அதை செய்வேன் என வாக்களித்திருப்பார் என்றால், அதை அவர் நிறைவேற்ற கடமைப்பட்டவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம் ஐயா‚ நிச்சயமாக அவர் செய்வார். நான் பாப்டிஸ்டு சபையில் மேய்ப்பனாக இருந்த போது ஒரு சமயம் ஒரு சின்ன நைட்டிங்கேல் பறவை (ஒரு வகை இரவில் பாடும் பறவை) ஒன்றை தொடர்ந்து கவனித்து வந்தேன். வழக்கமாக நான் இரவு நேரங்களில் வருவதுண்டு.அப்போது அந்த பறவை அங்கே அமர்ந்து கொண்டு இரவு முழுவதும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும். அது, வானத்திலே சற்றுமேகங்கள் கலைந்து, எங்கேயாவது ஒரு நட்சத்திரத்தை காணுமாகில் உடனே தன்னுடைய சின்ன இருதயத்தில் இருந்து எவ்வளவு சத்தமாக அதினால் பாட முடியுமோ அவ்வளவு சத்தமாக பாடும். ஏனென்றால் சூரியனானது எங்கேயோ பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என அறிந்திருக்கிறது. அதினுடைய அத்தாட்சியை, ஒரு நட்சத்திரம் பிரகாசிக்கிறதின் மூலம் சூரியன் எங்கேயோ பிரகாசிக்கிறது என்று அறிந்து இன்னும் சூரியன் எங்கேயோ இருக்கிறது என்பது உறுதிப்படுத்தினது. 24இன்றிரவிலே என் சகோதரனே, நான் நினைக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் பலமான காற்றைப்போல் வருகிற நாளில், அது காரிருள் மேகங்களை அகற்றி, அங்கே நாம் பண்டையகால எழுப்புதலைக் கொண்டிருப்போம். அங்கே தான் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிறார். அது எந்த ஒரு கிறிஸ்தவனையும் எழும்பிப் பிரகாசிக்க செய்யும். ஏனெனில் நாம் ஜீவிக்கின்ற இந்நாளில் தேவன் தம்முடைய ஜனங்கள் மேல் அவருடைய ஆவியை ஊற்றி ஆளுகை செய்து இன்னும் ஜீவிக்கிறார் என அறிந்திருக்கிறேன். ஆம் அது உண்மைதான். நான் ஒருவேளை காலை நேரத்திலே நடந்து, பெரிய விடிவெள்ளி நட்சத்திரத்தை பார்த்து,'விடிவெள்ளி நட்சத்திரமே எது உன்னை பிரகாசிக்க செய்கிறது?“ என்று கேட்பேனாகில், அதினால் மாத்திரம் எனக்கு மறு உத்தரவு சொல்லக் கூடுமானால், அது என்னிடத்தில் “சகோ. பிரான்ஹாம், பிரகாசிக்கிறது நான் அல்ல, சூரியன் தான் என் மேல் பிரகாசிக்கிறது” எனக் கூறும். 25சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு மருத்துவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடத்தில் 'சகோ. பிரான்ஹாம் அந்த மக்களுக்கு என்ன ஆனது“ என்று கேட்டார்.மேலும் 'அவர்கள் அனைவரும்அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். அது தான் அவர்களை அழச் செய்துபலிபீடத்தண்டையில் ஓடி வரும்படி செய்கிறது. இவையெல்லாம் வெறும் உணர்ச்சிவசப்படுதல் தான்” என்று கூறினார். அதற்கு நான் 'மருத்துவரே, ஒரு மனிதன் உணர்ச்சி வசப்படுவதற்கு முன்பாக அவனுடைய நரம்புகள் ஏதோ ஒன்றினால் ஊக்குவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நீர் நன்றாகவே அறிந்திருப்பீர்“ என்று சொன்னேன். அது நிச்சயமாக உண்மைதான். அவனுக்குள்ளாக ஏதோ ஒன்று இருக்கிறது. அதே போல் பரிசுத்த ஆவியானவர் வரும்பொழுது, அவர் மக்களுடைய உணர்ச்சியை கிளறிவிடுவார். அதுஉண்மையே. அவர்கள் தேவனுடைய ஆவியினாலே அபிஷேகத்தைப் பெற்று அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் வேளையில், பரிசுத்தஆவியானவர் அவர்களை முழுவதும் நிரப்பும்போது அது அவர்களுடைய உணர்ச்சியை கிளறிவிடும். அது அவ்விதமாகத்தான் செய்யும். இயேசு இவ்விதமாக 'இவர்கள் பேசாமல் அமைதியாய் இருந்தால் கற்கள் உடனடியாக அவரை கூப்பிடும்“ என்று கூறினார். அப்படியென்றால் நம்மைக் குறித்து என்ன? ஓ அதைப் பற்றி நான் சிந்திக்கும் பொழுது... “அதை செய்கிறது மக்கள் அல்ல” என்று சொன்னார். பிரகாசிக்கிறது மக்கள் அல்ல, பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்கள் மேல் பிரகாசித்து இவைகளை எல்லாம் செய்து வருகிறார். அது தான் அவைகளை செய்கிறது. அவர்கள் மேல் இருக்கின்ற தேவஆவியானவரே விசுவாசிகளாகும்படி செய்கிறார் மக்கள் அல்ல. அவர்கள் மேல் இருக்கின்ற தேவ ஆவியானவரே அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார்;. அவர்கள் மேல்இருக்கின்ற தேவ ஆவியானவரே தாங்கள் விடுதலையானவர்கள் என உணரும்படி செய்கிறார். 26சமீப நாட்களுக்கு முன்பு நான் ஒரு இடத்தை கடந்து போய்க் கொண்டிருந்தேன். வேட்டையாடும்படி மலைகளுக்கு போக எனக்கு விருப்பமுண்டு. அங்கே இருக்கிற ஒரு பழைமையான ஊற்றிலிருந்து தண்ணீர் குடிக்க எனக்கு பிடிக்கும். அந்த ஊற்றானது எப்பொழும் பொங்கி, பொங்கிப் பொங்கிக்கொண்டே இருந்தது. அதுவே என்னுடைய வாழ்கையில் நான் கண்ட மிக சந்தோஷமான ஊற்று. அது எந்நேரமும் பொங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் நான் அதை கடந்துபோனபோது, அங்கு நின்று,“எது உன்னை இவ்வளவு சந்தோஷமாய் இருக்கும்படி செய்திற்று? என்று கேட்டேன். ஒருவேளை மான்கள் உன்னிடத்தில் தண்ணீர் குடிப்பதினால், அது உன்னை பொங்க செய்கிறதா? என்றேன். அந்த ஊற்றினால் பேச முடிந்திருந்தால்,“இல்லை” என கூறி இருக்கும். அல்லது, கரடிகள் உன்னிடத்தில் வந்து குடிப்பதினாலா?என்றேன். அதற்கு அது “இல்லை” என்று சொல்லியிருக்கும். “ஒரு வேளை நான் உன்னிடம் வந்து தண்ணீர் குடிப்பதினால் உன்னை பொங்க செய்கிறதா?” என்றேன். அதினால் பேச முடிந்திருந்தால், அது 'சகோ. பிரான்ஹாம் அவர்களே, பொங்கும்படி செய்கிறது நான் அல்ல, எனக்கு பின்னாக இருக்கும் ஏதோ ஒன்று நான் பொங்கும்படி என்னை உந்தித் தள்ளுகிறது“ என்று சொல்லியிருக்கும். அந்த விதமாகவே தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஜீவ தண்ணீரின் ஊற்று பொங்கிக் கொண்டு இருக்கும்.பொங்குகிறது அவன் அல்ல, அவனுக்கு பின்னால் இருக்கும் பரிசுத்த ஆவியானவரே அவனை பொங்கும்படி செய்கிறார். அவரே அவனை விசுவாசிக்கச் செய்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு அனுபவங்களை கொண்டிருக்கும்படி, அதிக உயரத்திற்கும், ஆழத்தின் ஆழத்திற்கும் வழிநடத்தி செல்கிறார். இன்று நமக்கு அதுதான் தேவை. அதாவது மூடியை உடைத்து தண்ணீர் பொங்கிப் பீறிட்டுவருகிறதே இன்றைய தேவையாயிருக்கிறது. 27காலை வேளையில் பனித்துளியை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். நான் அநேக முறை பனித்துளி விழுகிறதை இரவு வேளைகளில் பார்த்திருக்கிறேன். நீங்களும் அந்த பனித்துளிகள் விழுகிறதை கவனித்துப் பாருங்கள். சூரியன் உதிக்கிறபோதெல்லாம் அந்த பனித்துளிகள் மிக மகிழ்ச்சியாயிருப்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா? அது அப்போது பளபளவென்று பிரகாசித்து ஜொலிக்கும். தொடர்ந்து ஜொலித்துக் கொண்டேஇருக்கும். ஒரு நாள், நான் காலை வேளையில் என்னுடைய முதல் வேதமான இயற்கையோடு பேசிக்கொண்டிருக்கையில், பனித்துளியை பார்த்து “சிறு பனித்துளியே எது உன்னை ஜொலிக்க செய்கிறது என கேட்டேன்?” அப்போது ஒரு வகையில் ஏதோ ஒன்று எனக்கு பதில் கொடுத்ததை போல் இருந்தது. “உனக்கு தெரியுமா, நேற்று இரவு நான் அங்கே இருந்தேன், இப்போது திரும்பவும் அந்த இடத்திற்கு நிச்சயமாக போவேன். ஏனெனில், இந்த சூடான பூமிக்கு அப்பால் இருக்கும் ஈரப்பதம் உள்ள இடத்திற்கு சொந்தமானவன் நான். ஒரு சமயம் நான் அங்கிருந்ததினால்,சூரியன் என் மேல் பிரகாசிக்கும் போது நான் களிகூருகிறேன். ஏனெனில் சூரியனின் பிரகாசமானது என்னை சரியாக நான் எங்கிருந்தேனோ அங்கேயே என்னை கொண்டு செல்லும் என அறிந்திருக்கிறேன்”என்று சொன்னது. அது சரி என நினைக்கிறேன். நீ அவ்விதம் பிரகாசிக்கிற காரணம் என்னவெனில் நீ ஒரு அனுபவத்தை பெற்றிருக்கிறாய். நீ ஒரு சமயம் அங்கே இருந்தாய். நான் இதைக் குறித்து நினைத்து பார்ப்பதுண்டு. மறுபடியும் பிறந்த ஒரு மனுஷன் இதன் ஜீவியத்தை விட்டொழிந்து, ஆசீர்வாதமும் மகிமையும், நிறைந்த வேறொரு பரிமாணத்திற்குள் பிரவேசிப்பான். மேலும் இந்நாட்கள் ஒன்றில், நீதியின் சூரியன் பூமியின் மேல் பிரகாசிக்கும்போது, அவ்விதமான அனுபவம் பெற்றவர்கள் அவரை நடுவானத்தில் சந்தித்து அந்த மகிமையின் ஸ்தானத்திற்கு திரும்பிச் சென்று காணாமற்போவார்கள். அப்போது அவர்களைச் சுற்றி யார் இருந்தாலும் அதைக் குறித்து அக்கரை இராது. ஏனெனில் அவர்கள் ஒரு விசை அங்கிருந்தவர்கள். ஆகவே அவர்கள் ஆவியின் அபிஷேகத்தின் நிலைக்குள் போகவேண்டும். ஏனென்றால், மேலான ஆவியாகிய இயேசு கிறிஸ்து ஓர் நாளில் அவருடைய சபையை உரிமை கோரும்படி வருவார். 28சமீப நாட்களில் நான் ஒன்றை வாசித்தேன் (அல்ல) என்னுடைய சகோதரர் மூர் அவர்கள் என்னிடத்தில் இதை சொன்னார். கடந்து சென்ற நாட்களில் இருந்து ஒரு மிகப் பெரிய எழுத்தாளன் இவ்விதமாக கூறினார் என்று நினைக்கிறேன். அவர் சொன்னது என்னவென்றால் “நான் இது வரைகண்ட காட்சியிலே மிகவும் கோரமான காட்சி எதுவென்றால், ஆகாயத்து பறவையான கழுகு, கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதே” என்றார். அவர் தொடர்ந்து, அது தன் தலையை கம்பிகளில் முட்டி அதினுடைய இறகுகள் சிறகுகளிலிருந்து விழும் அளவிற்கு அதினுடைய சிறகுகள் அடித்துக்கொண்டிருந்தது. அதினிமித்தம் அதினுடைய தலையிலிருந்தும் கழுத்திலிருந்தும் இறகுகள் இல்லாமல் போனது. அது தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்து வலிமையை இழக்கும்மட்டும் சிறகுகளை அடித்து கீழே விழுந்தது. அதன் பின் அதினுடைய விடாய்த்து போனகண்களால் சற்று மேலே பார்த்து தான் உண்மையிலே எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அங்கேஆகாயத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த கூண்டானது அதை வெளியே போகக்கூடாதபடிக்கு தடுத்தது. அதினால் அந்த கூண்டின் கம்பிகளில் இருந்து வெளியே போகமுடியவில்லையே என அதினுடைய விடாய்த்து போன கண்களினால் பார்த்துக் கொண்டிருந்தது“என்றார். 29ஆம் அது உண்மைதான் அது மிகவும் ஒரு கோரமானகாட்சியே. ஆனால் அதைக் காட்டிலும் மிகவும் பரிதாபமான வேறொரு காட்சி இருக்கிறது. அது என்னவெனில், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சாயலில் பிறந்த ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்க வேண்டிய அவர்கள் ஸ்தாபன சங்கிலிகளினால் கட்டிவைக்கப்பட்டிருப்பதே. அது அவர்களை அவருடைய வல்லமையுள்ள பிரசன்னத்தில் விடுதலையை பெறக்கூடாதபடிக்கும் பெந்தெகொஸ்தே நாளில் “என்னிடத்தில் இருப்பதை நான் உனக்கு கொடுக்கிறேன்” என்று உலகத்துக்கு சொல்லும்படி அவர்களுக்கு ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதமாகிய ஆசீர்வாதத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதபடிக்கும் அவர்களை பிடித்து வைத்திருக்கிறது. அந்த விதமான ஆசீர்வாதமும் அந்த விதமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுமே இன்று நம்முடைய தேவையாயிருக்கிறது. இன்று இரவு அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவராய் இருக்கிறார். அவர் இன்றிரவிலே நம்மத்தியிலிருக்கிறார். நாம் பிதாவினிடத்தில் அவருடைய சித்தத்தின்படி சரியாக எதைக்கேட்டாலும் அதை செய்யும்படி இங்கு இருக்கிறார். அவர் அதை செய்வேன் என வாக்குரைத்திருக்கிறார். “என்னுடைய நாமத்தினால் நீங்கள் கேட்டுக்கொள்கிறது எதுவோ அதை நான் தருவேன்” என்றார். 30திரு. உப்ஷா (Upshaw) அவர்கள் சுகமடைந்ததை குறித்து உங்களுக்கு ஓரிரண்டு அல்லது சில நிமிடங்களில் உங்களுக்கு சாட்சி கொடுப்பேன் என்று ஏற்கனவே உங்களிடத்தில் கூறினேன். நான் கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸிலி இருந்தேன். இந்த மனிதனைக் குறித்து என் வாழ்க்கையில் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. டீக்கன்களும் வாயில் காப்போன்களும் என்னை மேடைக்கு கொண்டுச் சென்றார்கள். நான் நடந்து போனேன். நான் நேரடியாக ஜெபவரிசையை அழைக்க துவங்கினேன். ஏனெனில் சகோ. பாக்ஸ்டர் அப்போது தான் ஒரு மகத்தான பிரசங்கத்தை செய்து முடித்திருந்தார். ஆகவே நான் பேச வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. ஆதலால் நான் மேடைக்கு வந்த உடனே ஜெபவரிசைக்கு அழைப்புக்கொடுத்தேன். நான் ஜெபவரிசைக்கு அழைப்புக் கொடுக்க துவங்கின போது ஒரு சிறு பையன் வைக்கோல் குவியலில் விளையாடிக்கொண்டிருந்ததை கண்டேன். அவன் கீழே விழுந்து தன்னுடைய முதுகு எலும்பை உடைத்துக் கொண்டான். அப்போது அங்கே வெள்ளை மீசையுடைய மருத்துவர் ஒருவர் தன்னுடைய கண்ணாடியை கீழேஅணிந்தவராய் அவனுடைய முதுகுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தார். பிறகு அந்த மனிதன் ஒரு மகத்தான நபராக புத்தகங்களுக்கு ஆக்கியோனாய் பெரிய நபராக இருப்பதை கண்டேன். பின்பு நான் கண்டதை அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். 31அந்தப்படியே நான் தொடர்ந்து ஜெபவரிசைக்கு வரும்படி அழைப்புக்கொடுக்க தொடங்கினேன். அப்பொழுது யாரோ ஒருவர் எழும்பி ஏதோ ஒன்றைசொல்லக் கேட்டேன். அடுத்த சில நிமிடத்தில் சகோ. பாக்ஸ்டர் என்னிடத்தில் வந்து “நீர் விவரித்துக் கூறின அந்த மனிதன் அங்கே நாற்காலியில் அமர்ந்திருகிறார். அவர் திரு. உப்ஷா அவர்கள். அவர் காங்கிரஸ் நபர்” என்றார். அதற்கு நான் “நல்லது, நான் அவரை குறித்து ஒன்றும் அறியேன்”என்றேன். பிறகு அவர் (உப்ஷா) மற்றொரு ஒலிப்பெருக்கியை வாங்கி “என் மகனே அது அப்படியே உண்மை. இந்த காரியம் எல்லாம் எப்படி உமக்கு தெரியும்?” என்றார்‚ அதற்கு, “அதை தரிசனத்தில் கண்டேன்” என்றேன். அதற்கு அவர், “உம்மை பாப்டிஸ்டு சபையில் ஊழியக்காரனாக நியமித்த டாக்டர் டேவிஸ் அவர்கள் என்னை இங்கு வரும்படி சொன்னார். ஆகையால் தான் நான் இங்கு இருக்கிறேன்” என்றார். அவர் தொடர்ந்து, “நான் சிறுவயது முதல் சுகத்தை பெற முயற்சி செய்து சுகமளிக்கும் ஆராதனைகளில் கலந்து வருகிறேன். இருப்பினும் அறுபத்தி ஆறு வருடமாக நான் முடமாக இருந்து வருகிறேன்” என்றார். அப்பொழுது அவருக்கு வயது எண்பத்தி ஆறு. அதற்கு நான், “நல்லது ஐயா‚ இப்பொழுது நான் உங்களுக்கு ஏதாவது ஒன்றை செய்யவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் நான் எதை காண்கிறேனோ அதை மாத்திரமே சொல்லமுடியும்” என்றேன். 32அதன் பிறகு கூட்டம் துவங்கி மேடைக்கு ஒருவரைகொண்டு வர ஆரம்பித்தபோது, எனக்கு முன்பாக ஆமை ஓடு போன்ற கண்ணாடியுடனும், சின்ன வட்ட காலர்கொண்ட கோட் (மருத்துவர்கள் அணியும் கோட்) அணிந்த மருத்துவர் ஒருவர் தன்னுடைய கைகளை இப்படி கட்டிக்கொண்டு தலையை அசைத்து நடுவானத்தில் நின்றிருந்ததைக் கண்டேன். அவருக்கு கீழே மாநிறம் கொண்ட ஒரு சிறு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து அவளுடைய தொண்டையில் சதை வளர்ச்சியை எடுத்தார். அது அவளை முடங்கிவிடும்படி செய்தது. நான் இதை கூறினபோது, அங்கே அவருக்கு பின்னாக இருந்த ஒரு மாநிறம் கொண்ட தாயார் ஒருவர் தன்னுடைய கரத்தில் வண்டியை பிடித்தவாறு உறத்த சத்தமாய் 'ஆண்டவரே, இரக்கமாயிரும், அது என்னுடைய குழந்தையே. சரியாக அந்த விதமான மருத்துவரே அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தார்“ என கதறினாள். அப்போது வாயில்காப்போன்கள் அவள் மேடைக்கு வரக்கூடாதபடிக்கு தடுக்க வேண்டியதாய் இருந்தது. ஏனெனில் நாங்கள் ஜெப அட்டை வரிசையின்படி போக வேண்டியதாயிருந்தது. அதுவே எங்களுக்கு தெரிந்த நியாயமான மிகச் சிறந்த வழி. 33அந்த எளிமையான தாய் தன் குழந்தைக்கு மருந்து கொடுத்தவாறு வாயில்காப்போன்களை எல்லா வழியிலும் தள்ளிக் கொண்டு மேடைக்கு எப்படியாவது வந்து விட வேண்டுமென வந்தாள். நான் அந்த குழந்தையைப் பார்த்து, அவர்களிடம் “ஆம் ஆண்ட்டி. அது அந்த சிறுபெண்தான்;” என்று சொன்னேன்.“அந்த நபர் ஒரு வாலிபனாக அவருடைய முடிமென்மையானதாய் கறுப்பாக இருந்தது” என்றேன். அதற்கு அவள், 'ஆம் அது சரியே. என்னுடைய குழந்தை குணமாக வாய்ப்புண்டா?“என்றாள். அதற்கு நான், 'ஆண்ட்டி, எனக்கு தெரியாது. வெறுமனே என்னால் அப்படி கூறமுடியாது. நான் எதை பார்க்கிறேனோ அதை மாத்திரமே என்னால் செய்யமுடியும். அவ்வளவு தான். அந்த விதமாகத்தான் நம்முடைய கர்த்தராகிய இயேசுவும் செய்தார். “பிதா எனக்கு காண்பிக்கும் வரை என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். நான் தொடர்ந்து “தேவன் உன்னுடைய குழந்தையை சுகப்படுத்துவார் என நீ விசுவாசித்தால் அது நிச்சயமாக நடக்கும். மற்றும் அதே போல் தான் அந்த கணவானும் சுகத்தை பெறுவார்” என்றேன். தேவன் மாத்திரம் நகர்ந்து சரியாக ஒரு நபரை குறித்து பார்வையாளர்கள் முன்பாக பேசுவாரானால்... 34நான் என்னுடைய வாயில் காப்பாளன் ஒருவரிடத்தில் “இருக்கட்டும், ஜெப வரிசையை அழையுங்கள்” என்றேன். அப்போது அவர்கள் ஒரு ஸ்திரீயை என்னிடத்தில் கொண்டு வரும்படி வந்து கொண்டிருந்தார்கள். அந்நேரம் அது மறுபடியுமாக என்னை இப்பக்கம் அழைத்து. அப்போது அது என்ன என்று பார்த்தபோது, அது பார்ப்பதற்கு ஏதோ ஒரு கறுப்புக் கோடுமக்கள் மேலே போய்க் கொண்டிருந்ததை போல் காணப்பட்டது. நான் ஏதோ தீய காரியம் என நினைத்தேன். ஆனால் அது விரிவடைந்து தத்ரூபமாக காணப்பட்டபோது அது ஒரு தெரு அல்ல சாலையாக காணப்பட்டது. அந்த சாலையிலே இந்த மாநிறமுடைய சிறு பெண் கையில் பொம்மையை வைத்தவாறு தன் கையை இப்படி வீசிக் கொண்டிருந்ததை கண்டேன். அவ்வளவு தான் சகோதரனே அது போதும். இதை நிறுத்த சாத்தானுக்கு போதுமான அளவு பிசாசுகள் பாதாளத்தில் இல்லை. ஏனெனில் தேவனே அதை வெளிப்படுத்தினார். அது நிச்சயமாக சரிதான். அந்த சமயத்திலே, நான் அவர்களிடத்தில், “ஆண்ட்டி, உங்களுடைய ஜெபங்கள் கேட்கப்பட்டது, இயேசு கிறிஸ்து உங்களுடைய குழந்தையை சுகமாக்கினார். அதினுடைய பாதத்தில் எழுந்து நிற்கட்டும்” என்றேன். அதற்கு அவள், “என்னுடைய குழந்தை சுகமடைவாளா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “அவள் சுகமாய் இருக்கிறாள்”‚ என்றேன். அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், அந்த குழந்தை எழுந்து 'அம்மா“ என்று அழைத்து தன் கைகளை உதறினது. இரண்டுவருடம் அவளுடைய தோள்பட்டை மேலிருந்து கீழ்மட்டுமாக முடமாக இருந்து. அதன் பின் அந்த தாயும் மகளும் ஒருவர்மேல் ஒருவர் தங்களுடைய கரத்தை போட்டுக்கொண்டு, கூச்சலிட்டு, அழுதுகொண்டு இருந்தார்கள். அவர்களை சுற்றிநின்று கொண்டிருந்த மக்கள் மயங்கி விழுந்தார்கள். 35அது மக்கள் மேலாக போய்க் கொண்டிருந்ததை கவனித்தேன். சரியாக மக்களின் தலைகளின் மேல் போய்க் கொண்டிருந்தது. அப்போது பிரசித்தி பெற்ற அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் உப்ஷா அவர்கள் பழுப்பு நிற வரிகோடிட்ட சூட்டை அணிந்து எல்லோருக்கும் முன்பாக தன் தலையை வணங்கிக் கொண்டு இருந்ததை கண்டேன். சரியாக மக்கள் மத்தியிலே போய்க் கொண்டிருந்தது. அதன் பிறகு நான், “பாராளுமன்ற உறுப்பினரே உங்களிடத்தில் பழுப்புநிற வரி கோடிட்ட சூட் இருக்கிறதா என்று கேட்டேன்?” அந்நேரத்தில் அவர் கறுப்பு (அல்ல) நீல நிற சூட்மற்றும் சிவப்பு நிற டை அணிந்திருந்தார். அதற்கு அவர் “ஆம், ஐயா, என்னிடம் உள்ளது. அதை சில நாட்களுக்கு முன் நான் வாங்கினேன் என்றார்.” பிறகு நான் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். நீங்கள் சுகத்திற்காக எழுந்து நில்லுங்கள். இது கர்த்தர் உரைக்கிறதாவது. அவர் உங்கள் மேலுள்ள மதிப்பின் நிமித்தம் நீங்கள் சுகமானீர்கள்”என்றேன். அறுபத்தி ஆறு வருடமாக முடியாமல், படுக்கையில் உருண்டு, சக்கர நாற்காலியில் இருந்த, அந்த பாராளுமன்ற உறுப்பினர், தன் கால்களினால் எகிறி குதித்து, ஊன்று கோல்கள் எதுவுமே இல்லாமல் மேடைமேல் ஓடி வந்தார். அவர் தன்னுடைய கால் விரல்களை இப்படியாக தொட்டுப் பார்த்தார். அவரால் ஏறக்குறைய அவருடைய கையை எல்லா பக்கமும் சுழற்ற முடிந்தது. முற்றிலும் சுகத்தைப்பெற்று சகஜமாக இருந்தார். 36இது மரணத்தினின்று உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையாயிருக்கிறது. அவர் அன்று இந்த உலக முழுவதிலும் செய்ததை இன்றிரவும் செய்யும்படி, இந்த கட்டிடத்தில் இருக்கிறார். நான் மற்ற தேசங்களிலே அவர்களுடைய பாஷை தெரியாமல் எப்படி என்னால் ஊழியம் செய்ய முடிகிறது என்று நீங்கள் ஒருவேளை யூகித்து அல்லது கற்பனை செய்து பார்க்கலாம். உதாரணத்திற்கு இங்கே சுவீடன் நாட்டிலிருந்து ஒரு சகோதரர் வந்திருக்கிறார். பின்லாந்திலிருந்தும், ஆப்ரிக்காவிலிருந்தும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் பாஷையில் ஒருவார்த்தை கூடஎனக்கு தெரியாது அல்லது சுத்தமாகவே தெரியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் சரியாக ஒரு நபரை சுட்டி காட்டி அவர்களிடத்தில் பேசி அவர்கள் புரிந்து கொள்ளும் விதானத்தில் அவர்களுக்கு வியாக்கியானம் செய்வார். அப்பொழுது அவர்கள் தாங்கள் செய்து கொண்டிருக்கின்ற காரியங்களையும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பாவத்தையும் புரிந்து கொள்வார்கள். அது ஒருமுறை கூட தோற்றுப் போகவில்லை. ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார். அவரை நான் நேசிக்கிறேன். 37உங்களை இவ்வளவுநேரம் காக்க வைத்ததற்காக என்னை மன்னியுங்கள். இன்னும் சிறுது நேரத்தில் ஜெபவரிசையை அழைத்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். தேவன் உங்களோடு இருப்பாராக என் அன்பு நண்பர்களே. உங்களில் அநேகர் நாளைய தினத்தில் உங்களுடைய சபைகளில் உங்களுக்குரிய பொறுப்பில் இருங்கள் மற்றும் எனக்காக உங்களுடைய மேய்ப்பர்களை வாழ்த்துங்கள். நான் முழுமையாக சபை பாகுபாடு அற்றவன். நான் கிறிஸ்தவர்கள் எல்லாரும் சகோதரர் சகோதரிகள் என்று விசுவாசிக்கிறேன். மற்றும் நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஆராதிக்க வேண்டும். இப்படிப்பட்ட தடைகள் நம்மை உடைக்கிறது என்பது மிக தவறானது. மேலும் என்னுடைய ஜீவியத்தில் நான் ஒருபோதும், ஒரு முறை கூட எனக்கு தெரிந்து எந்த ஒரு நபரையும் நீ எந்த சபையை சேர்ந்து இருக்க வேண்டும் என்று அவருடைய மனதை மாற்றும்படி பேசுவதில் குற்றமற்றவனாய் இருக்கிறேன். ஒரு மனிதன் தான் எந்த சபைக்கு போக வாஞ்சிக்கிறானோ அங்கே அவன் செல்லும்படி சிந்திக்கதக்க சுதந்திரத்தை பெற்றிருக்கிறான் என்று விசுவாசிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். உங்களுக்கு தேவையானது ஒரு புது சபை அல்ல, ஆனால் பழமை வாய்ந்த அருமையான அந்த பண்டைய கால எழுப்புதலே உங்களுடைய சபைக்கு தேவை; உங்களுக்கு அதுவே தேவை. நம் எல்லோருக்கும் அது தேவை என நான் விசுவாசிக்கிறேன். மற்றும் இங்கு இருக்கும் மேய்ப்பர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஒருவேளை இயேசுகிறிஸ்து மரணத்தினின்று உயிர்த்தெழுந்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் நிரூபிக்கிறதை நீங்கள் என்னோடு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் அப்படி இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் இன்னும் என் சகோதரன் தான். அதற்காக தேவன் உங்களை மன்னிப்பாராக. அவர்தாமே உங்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறேன். மேலும் அந்த மகத்தான நாள் வரும்பொழுது நாம் தாமே இயேசுவின் இராஜ்ஜியத்தில் அவருடைய பாதத்தண்டையில் அமர்ந்து, நம்முடைய பிரசங்கித்தினால் இரட்சிக்கப்பட்டு அக்கரையிலே பாதுகாப்பாய்யிருக்கிற அநேக ஆயிரக்கணக்கான மக்களை நாம் காணட்டும். இப்பொழுது கர்த்தர் உங்களோடு இருப்பாராக, நாம் ஜெபிக்கலாம். 38பிதாவே, உம்முடைய வார்த்தைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வார்த்தையே ஜீவன். நீர் “விசுவாசம் கேள்வியினால் வரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறதினால் வரும்” என்று சொன்னீர். ஆகவே இன்றிரவிலே இங்கு கூடி வந்திருக்கிற இந்த கூட்டத்தாரை நீர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறேன். ஆண்டவரே, அவர்களை எப்பொழுதும் உமக்கு முன்பாக வைத்தருளும். அவர்களுடைய பெயர்களை உம்முடைய கரத்திலே எழுதும். மரணம் அவர்களை விடுவித்து, அவர்கள் அக்கரைக்கு போகுமட்டும், ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்களாக ஜீவிக்கும்படி அவர்களை கர்த்தராகிய இயேசுவின் இருதயத்திலே வைத்தருளும். இன்றிரவிலே, பின்மாற்றமடைந்தவர், வெட்கப்பட்டு, பரம பிதாவின் வீட்டிற்கு வருவானாக. பாவி மனந்திரும்பி வீட்டிற்கு வருவானாக. நீர் தாமே வியாதியஸ்தர்களையும் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நீர் இந்த ஆராதனையிலிருந்து மகிமையை எடுத்துக்கொள்ளும். வியாதியஸ்தர்களை சுகப்படுத்தும்படி, நாங்கள் எங்களை உமக்கு அர்ப்பணிக்கிறோம். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 39இப்பொழுது ஆராதனையைப் பொறுத்தமட்டும்... அவர் எந்த அட்டைகளைக் கொடுத்திருக்கிறார்; என பாருங்கள்? நல்லது. நாங்கள் இங்கே நின்று மணிக்கணக்கில் பிரசங்கிக்கலாம். நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவுடன் ஜெப வரிசை இடத்தை (கிரமத்தை) மாற்றப் போகிறேன். இப்பொழுது இந்த தொடர் கூட்டத்தை பொறுத்தமட்டில், சிகாகோவிற்கு, நாளைய இரவு ஆராதனையே, கடைசி ஆராதனையாயிருக்கும். பிறகு நாங்கள் மேற்கு கடற்கரைக்கு பயணிக்கிறோம். அதன் பிறகு திரும்பவும் நியூயார்க் பட்டணம் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்கிறோம். நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன். மற்றும் நீங்கள் நடந்து கொள்ளும் விதானத்தையும் நீங்கள் செய்கிற காரியங்களையும் பார்க்கும்போது நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என நான் அறிவேன். அது இருதரப்பிலும் உணரப்பட்டிருக்கிறது. 40இப்பொழுது நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கக்கூடிய ஒரே வழி என்னவென்றால் அதாவது எனக்குத் தெரிந்த ஒரே வழியானது, இதை நீங்களும் உறுதியாய்ப் புரிந்துகொள்ளும்படி சொல்லட்டும். நான், இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்றும் அவரை அவர்கள் சிலுவையில் அறைந்து, அடக்கம் செய்தபின், மூன்றாம் நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பினறென்றும் கோருகிறேன். பிறகு அவர் பூமியிலே நாற்பது நாட்கள் இரவும் பகலும் சீஷர்களோடு இருந்து நாற்பதாவது நாளிலே எடுத்துக் கொள்ளப்பட்டு தம்முடைய சீஷர்களிடத்தில் “நான் போகிறேன்,இனி இந்த உலகம் என்னை ஒருகாலமும் காணாது” என்று சொன்னார். உலகம் அவரை காணமுடியாது, ஆனால் அவர்களால் அவரைக் காணமுடிந்தது. அவர் அவர்களோடு இருந்தார். உலகத்தின் முடிவு பரியந்தமும் அவருடைய சீஷர்களோடு ஒவ்வொரு சந்ததியிலும் இருப்பார். 'இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும் நான் உங்களோடே கூட இருக்கிறேன்“ என்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 41பெந்தெகொஸ்தே நாளிலே, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானது அவர்களுக்கு கொடுக்கப்பட்டதென்பது, இயேசுகிறிஸ்துவின் ஆவியே சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். மற்றும் இயேசு மாம்ச சரீரத்தில் எப்படி அவர்கள் மத்தியில் ஜீவித்தாரோ, அதே விதமாக இன்றிரவும் தன்னுடைய சபையில் தன் மக்கள் மத்தியில் ஜீவிக்கிறார். நாம் பெற வேண்டிய மரண தண்டனையை ஏற்று தேவனிடத்திற்கு நம்மை மீட்டு திருப்பும்படி மாம்சமானது பலியாக மரிக்கவேண்டியிருந்தது. இப்பொழுது, மேலே சென்ற அதே இயேசு ஒரு நாளிலே அவர் திரும்பவும் தத்ரூபமாக இயற்கையான சரீரத்தில் வருவார் என விசுவாசிக்கிறேன். சபையில் இருக்கும் ஆவியானது எடுக்கப்பட்டு திரும்பவும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் சென்றுவிடும். பின்னர் அவர் சீஷர்களிடத்தில் எப்படியாக, புசித்து குடித்து, பேசிக்கொண்டிருந்தாரோ, அதே இயேசு அவர் எடுக்கப்பட்ட வண்ணமாகவே திரும்பவும் சரீர வடிவில் வருவார். அவர் திரும்பவும் வருவார் என விசுவாசிக்கிறேன். இன்றைய உலகத்தின் பிரச்சனைகளுக்கெல்லாம் அது மாத்திரமே ஒரே பதில் என்று விசுவாசிக்கிறேன். அது சரிதான். 42பின்பு இயேசு “நான் செய்யும் கிரியைகளை நீங்களும் உலகத்தின் முடிவுபரியந்தமும் செய்வீர்கள்” என கூறினார் என விசுவாசிக்கிறேன். இந்த காரியங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலோடு கூட இணைந்து நடக்க வேண்டிய காரியங்கள் என விசுவாசிக்கிறேன். இப்பொழுது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதவாக்கியம், போதிக்குமானால், என்னுடைய தாழ்மையான கருத்தின்படி அவர் அன்று என்ன செய்தாரோ, அதை தன்னுடைய மக்களுக்கு முன்பாக, தன்னுடைய வார்த்தையை காத்துக்கொள்ள எப்பொழுதும் கடமைப்பட்டவராயிருக்கிறார் என்று நாம் அறிகிறோம். நான் இங்கு இருப்பேன் என்று உங்களுக்கு வாக்களித்து அதை நான் தெரிந்தே...இப்பொழுது தேவனால் நிறைவேற்ற முடியாத எந்த ஒரு வாக்குத்தத்தத்தையும் அவர் கொடுக்கமாட்டார். நான் ஒருவேளை ஒரு வாக்கை கொடுத்து அதிலிருந்து பின் வாங்கலாம். ஆனால் தேவன் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என வாக்குத்தத்தம் செய்திருப்பாரானால், அவர் செய்த காரியங்களை, உலகத்தின் முடிவுபரியந்தமும் சபை அதை எப்பொழுதும் செய்யும். அவர் வாக்குப்பண்ணின காரியத்தை நிறைவேற்ற அவருடைய வார்த்தைக்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார். இப்பொழுது அவைகள் நடக்கக்கூடாதபடிக்கு தள்ளிவைப்பது எதுவென்றால் நம்முடைய அவிசுவாசமே. அதுமாத்திரமே. அந்த ஒரு காரியம் மாத்திரமே. 43“ஓ, எங்களுக்கு விசுவாசம் இருக்கிறது. எங்களுக்கு அன்பு இருக்கிறது” என நாம் சொல்லுகிறோம். ஆனால் நாம் அன்பை கொண்டிருந்தால், நாம் விசுவாசத்தையும் கொண்டிருப்போம். “ஏனெனில், பரிபூரண அன்பு எல்லா பயத்தையும் வெளியே தள்ளுகிறது” மற்றும் எப்பொழுது பயம் போகிறதோ அப்போது விசுவாசம் பூரணப்படும். நீங்கள், அவர் தன்னுடைய வார்த்தையை காத்துக்கொள்ளமாட்டார் என பயப்படுகிறீர்கள். ஆனால் அவர் அதை காத்துக்கொள்வார் என நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது அவர் என்ன செய்தார் என நாம் பார்க்கலாம். அவர் இந்த பூமியில் இருந்தபொழுது, “அந்த நபரை என்னிடம் கொண்டுவாருங்கள், நான் அவரை சுகப்படுத்தட்டும்” என சொல்லவில்லை. இது முரண்பாடாக இருக்கக்கூடும். அவரால் மரித்தவரை எழுப்ப முடியும் என விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆனால் அவர் மரித்த எல்லோரையும் எழுப்பவில்லை.அவருடைய முழு ஊழியத்திலேயும் அவர் மூன்று மரித்தோரை மட்டும் உயிரோடு எழுப்பினார் என்று வேதவாக்கியம் மேற்கோலிட்டு காட்டுகிறது. மூன்று என்பது நிரூபணத்தை குறிக்கிறது. 44ஒருவேளை மக்கள் வந்து இப்படியாய் கூறியிருக்கலாம் “இங்கே வந்துபாருங்கள், அந்த ஆசாமியை கவனியுங்கள். அவர் மரித்துபோன லாசருவை உயிரோடு எழுப்பினாரென்றால், அவர் வந்து என்னுடைய மாமாவை எழுப்பட்டும். அவரால் அப்படி செய்ய முடிகிறதா இல்லையா என நாம் பார்க்கலாம்” நிச்சயமாகவே அவ்விதமான விமர்சனங்கள் தொடர்ந்திருக்கும். யூதர்கள் தாங்கள் செய்த விதானத்தின் மூலம் அவர் மேல் அதிகமாய் வெறுப்பைக் காட்டினார்கள். அவர்கள் அவ்விதம் விமர்சித்தார்கள். கவனியுங்கள், அவர் பெதஸ்தா குளத்தை கடந்து போனபோது, அங்கே அநேக முடவர்களும், நொண்டிகளும் மற்றும் குருடர்களும் இருந்தனர். அவர் அந்த முடவர்களையும், நொண்டிகளையும் நகரமுடியாமல் இருந்தவர்களையும், குருடர்களையும், தலை வீங்கிப்போன குழந்தைகளையும், அதுபோன்று அநேக ஆயிரக்கணக்கான ஜனத்தினூடாகக் கடந்து, கோரைப்பாயில் படுத்துக் கிடந்த மனுஷனிடத்தில் வந்தடையும் மட்டும் சுற்றித்திரிந்தார். பிறகு அவனை மாத்திரம் சுகப்படுத்தி அங்கு படுத்துக்கிடந்த மற்ற எல்லாரையும் விட்டு கடந்து போனார். அதே அதிகாரத்தில் யூதர்கள் அவரை கேள்வி கேட்டார்கள். அதற்கு அவர் “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய் செய்யமாட்டார்” என்றார். 45இப்பொழுது, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்றால், அவர் இன்றும் அதே இயேசுவாக இருக்கிறார். இல்லையா? அவர் கிணற்றண்டையிலே அந்த ஸ்திரீயை சந்தித்தபொழுது, அவளிடத்தில் என்ன குறை இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் வரை அவளோடு நீண்ட நேரம் பேசினார். அவர் மக்களிடத்தில் பேசினபோது,அவர்களுடைய எண்ணங்களை வகையறுத்தார். அவர்களுடைய விசுவாசம் அவரை தொட்டது. இன்றிரவிலே இக்கூட்டத்தில் இருக்கும் மக்களாகிய நீங்களும் உங்களுடைய விசுவாசத்தினாலே அவரைத் தொடமுடியும். அவர் ஒருவேளை இந்த மேடையின் மேல் இருப்பாரானால், நீங்கள் அவரை உங்கள் விசுவாசத்தினால் தொட முடியும், அது அவரை உங்கள் பக்கமாக திருப்பி, “உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன (அல்லது) உன்னுடைய புற்றுநோய் குணமானது (அல்லது) உன்னிடத்தில் இந்த தவறு இருக்கிறது” என்று சொல்ல வைக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது, இப்பொழுது அவருக்கு நம்முடைய கைகளையன்றி வேறுகைகள் இல்லை. அவர் இங்கே ஆவியின் ரூபத்தில் இருக்கிறார், நம் கண்களை தவிர வேறு கண்கள் இல்லை, நம் காதுகள் அன்றி வேறு காதுகள் இல்லை, நம் நாவைத் தவிர வேறு நாவு இல்லை. ஆகையால் அவர் எல்லாவற்றையும் கொண்டிருக்க அனுமதிக்கலாம். இதனுடைய இரகசியம் என்னவெனில், தெய்வீக அன்போடு, நம்முடைய நேச பிதாவினுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து, அவர் நம்மை ஆளுகைசெய்யும்படி அனுமதிக்க வேண்டும். அவ்வளவுதான். 46இங்கு இருக்கும் கைக்குட்டைகளுக்காக நாம் ஜெபிக்கலாம். ஆண்டவரே நாங்கள் நம்புகிற தேவ குமாரனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வருகிறோம். இங்கு அவர்களுக்கு பிரதிநிதித்துவமாக வைக்கப்பட்டிருக்கும் கைக்குட்டைகளின் நபர்கள் மேல் உம்முடைய ஆவி வருவதாக. இதற்குரியவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமையினால் சுகமடைந்து பூரணமாய் இருப்பார்களாக. அந்த நோக்கத்திற்காகவே நாங்கள் இவைகளை அனுப்புகிறோம். தேவனாகிய கர்த்தாவே நீர் இவைகளை கவனித்து, இந்த ஏழைகள் மீதும், வியாதியஸ்தர்கள் மீதும், துன்பப்படுகிற மக்கள் மீதும் இரக்கம் காட்டி உம்முடைய மகிமையை விளங்கப்பண்ணும். ஒருவேளை சில மக்களை மருத்துவர்கள் கைவிட்டு இருக்கலாம். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த கைக்குட்டை மாத்திரமே. இந்த கைகுட்டையானது அவர்களுக்காக ஜெபிக்கின்ற ஒரு கிறிஸ்துவ சபை இருக்கிறது என்பதற்கு அடையாளமாய் இருக்கிறது. பிதாவே, இது அப்படியே நடக்கும்படி கேட்கிறேன். ஆமென் 47நன்றி சகோதரனே. என்ன நம்பர்? 'உ“ எழுத்தின் தொடர் எண்களா? எத்தனை? நூறு எண்களா? நல்லது, இன்றிரவு எத்தனை பேரை இங்கு சந்திக்கப்போகிறோம் என பார்க்கலாம். நாம் எண் ஒன்றிலிருந்து துவங்கலாம். 'உ” எண் ஒன்று (உ 1), எண் 1, 2,3, 4, 5, 6, 7, 8, 9, 10 தொடர்ந்து 15 எண்ணிலிருந்து 20 வரை போகலாம். நீங்கள் எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு பரவாயில்லை, ஆனால் ஒரே சமயத்தில் அநேகர் இங்கு வந்து நிற்க வேண்டாம். நாம் எண் ஒன்றிலிருந்து துவங்கி இரண்டு மூன்று நான்கு ஐந்து முதல் பதினைந்து வரை பார்க்கலாம். அதன் பிறகு இன்னும் எத்தனை பேர் மீதமாக நின்று கொண்டிருக்கிறீர்கள் என பார்க்கலாம். இப்பொழுது அவர்கள் வந்து கொண்டிருக்கும் வேளையிலே, நான் சபையாரை ஒன்று கேட்கட்டும். ஒரு சில நிமிடம் இருக்கிறது. கூட்டத்தாரை நோக்கிப் பாருங்கள். இங்கு மேலே இருப்பவர்களைக் காட்டிலும் அநேகர் அங்கு சுகத்தை பெற்றனர். அது சரிதானா? இதை நினைவில் கொள்ளுங்கள், நான் இங்கு இருந்துகடந்து போய் அநேக நாட்களுக்கு பிறகு இந்த கூட்டத்தில் இருந்தவர்களில் அநேகர் நன்றாகவும் சகஜநிலைக்கு வந்திருப்பதையும் காண்பீர்கள். நான் இதுவரை காணாத ஒன்றை நேற்று மாலையில் கண்டேன். ஒரு அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டு தத்ரூபமாக வெளியேறினதைக் கண்டேன். அது அந்த நபரை விட்டு போனது.அதை நான் கடந்த இரவிலே கண்டேன். கிறிஸ்தவ நண்பர்களே, நான் ஒரு மத வெறியன் அல்ல, மதவெறியில் நான் விசுவாசம் வைப்பதில்லை. உங்களைக் காட்டிலும் அதிகமாய் நான் அதை எதிர்க்கிறேன். அதை எதிர்ப்பது என்னுடைய கடமையாக இருக்கிறது. அதை பலவீனப்படுத்தி என்னால் முடிந்தவரை சபையை சரியாக வைக்கவேண்டியதே என்னுடைய கடமையாயிருக்கிறது. நான் மதவெறியை விசுவாசிப்பதில்லை. ஆகிலும் எனக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமை என்றால் என்ன என்று தெரியும். மற்றும் பிசாசுகள் இருக்கிறது என்று நான் அறிவேன். 48இப்பொழுது இங்கே இந்த வல்லமையானது... அவர்கள் மக்களை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நான் இதை கேட்கட்டும். இங்கு இருக்கும் எத்தனை பேர் தேவனுடைய இராஜ்ஜியத்தில் “அன்பு” மிக அவசியமானது என்று விசுவாசிக்கிறீர்கள்? அது சரி. இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு சின்ன இரகசியத்தை கொடுக்கப்போகிறேன். நீங்கள் மக்களை நேசிக்கும்போது, அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். மனிதன் தனக்கு உள்ளே அவன் ஒரு சிருஷ்டிகன் என்று உங்களுக்குத் தெரியுமா? எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அவன் தேவனுடைய குமாரனாக தன் நிலையில் இருந்து விழுந்து போனவனாய் இருக்கிறான். இன்றைக்கு, நாம் சிகாகோவின் வானுயர்ந்த கட்டிடத்தை பார்க்கும்பொழுது, மனிதன் ஒரு மிருகத்தை காட்டிலும் மேலானவனாக இருக்கிறதை காண்பீர்கள். ஒரு மிருகம் இப்படிப்பட்ட கட்டிடங்களையும், நகரங்களையும், அழகான படகுகள் கொண்டிருக்கும் துறைமுகம் போன்றவைகளை கட்டுகிறதை பார்த்திருக்கமாட்டீர்கள். அவன் ஒரு சிருஷ்டிகன். நீங்கள் ஒரு நபரோடு எப்பொழுதும் இருக்கும்படி விரும்பி, அவருடன் இருந்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட நபர்களைக் கொண்டிருப்பீர்கள். இவ்விதம் செய்தது எது? அவர்களை சுற்றி அவர்கள் உருவாக்கும் சூழ்நிலையே அதற்கு காரணம். நீங்கள் ஒருவேளை அருமையான மக்களோடு இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தைசுற்றி உங்களால் நிற்கக் கூடமுடியாது. ஏனெனில் அவர்களுடைய சூழ்நிலை அவ்விதமாய் இருக்கிறது. அன்பே அதற்கு காரணம். அன்பு ஆழமாய் செல்லும், அது பெரிய காரியங்களை செய்யும் மற்றும் இயேசுகிறிஸ்துவே தேவனின் அன்பாக இருக்கிறார். 49தேவன் என்மேல் கோபமாய் இருக்கிறார் என நினைத்ததுண்டு ஆனால் கிறிஸ்து என்னை நேசித்தவராய் இருக்கிறார். அதன் பிறகு கிறிஸ்துவே தேவனுடைய இருதயமாய் இருக்கிறார் என கண்டறிந்தேன். அவரே தேவனுடைய இருதயம். இயேசுகிறிஸ்துவே தேவனின் இருதயம். இப்பொழுது அன்பு மேற்கொள்ளும். அன்பு பாவத்தை மறைக்கும் (அல்லது) பாவத்தை விட்டு விலகி இருக்கும். “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைதந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” இப்பொழுது, அன்பு பாவத்தை மறைக்கும் அல்லது அன்பு வியாதியஸ்தரை சுகப்படுத்தும். நீங்கள் மக்களை அன்பு கூறுவது போல நடிக்கலாம். நீங்கள் இவ்விதம் சொல்லலாம் “ஆ... நான் மிஸ்.ஜோன்ஸ் அவர்களோடு அவ்வளவாக ஒத்து போகமாட்டேன். ஆனால் அவர்களை நேசிக்கிறேன்” என்று நீங்கள் சொல்லலாம். இந்த காரியம் மிஸ். ஜோன்ஸ்க்கு மிக நன்றாகவே தெரியும். ஆம் நிச்சயமாக அவள் அதை அறிவாள். ஆகவே நீ வெறுமனே அப்படிசெய்ய வேண்டாம். நீ அவளை நேசிக்கிறதை போல எவ்வளவு தான் நடித்தாலும் சரி, அவளை நீ நேசிக்கவில்லை. அந்த விதமாக தான் தெய்வீக சுகத்திலும் மற்றும் மற்ற காரியத்திலும் இருக்கிறது. நீ நடித்து பாவனைசெய்ய முடியாது. நீ அதை பெற்றிருக்க வேண்டும். 50எத்தனை பேர் என்னை உங்கள் முழு இருதயத்தோடு நேசிக்கிறீர்கள்? நான் உங்களுக்கு ஒரு சின்ன கதையை சொல்ல விரும்புகிறேன். நல்லது. உண்மையில் உங்களுடைய திட நம்பிக்கைமிக ஆழமாக உள்ளது என நம்புகிறேன். இது ஒரு வேளை கேட்பதற்கு உங்களுக்கு வினோதமாக இருக்கக்கூடும். உங்களில் அநேகர் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். சகோ. உட் இங்கே அமர்ந்து என்னைப் பார்த்து சிரிக்கிறார். அந்த அனுபவம் அவருக்கு தெரியும். மக்களே, நீங்களும் வந்துபோங்கள் அப்பொழுது அது என்ன என்று உங்களுக்கும் தெரியும். கடந்த கோடையில், என்னால் என்னுடைய வீட்டின் முன் இருக்கும் புல்லை எந்திரம் கொண்டு முழுமையாய் வெட்ட முடியவில்லை. ஏனெனில் பின்புறத்தில் இருக்கும் புல்லை வெட்டி முடிக்கும் முன்னரே, முன்புறத்தில் மறுபடியும் புல் வளர்ந்துவிடும்.நான் கொஞ்சம் வெட்டத் துவங்குவேன் உடனே மக்கள் வந்து விடுவார்கள். ஆகவே அவர்களுக்காக ஜெபிக்கும்படி சென்று விடுவேன். நான் திரும்பவும் வந்து இரண்டு சுற்று வெட்டுவேன். முன்பக்கத்தில் எனக்கு சற்று பெரிய இடம் உண்டு. என்னுடைய மனைவி இப்படியாய் கூறுவார்கள் , 'நீங்கள் அணிந்திருக்கும் ஆடையோடு வெளியே சென்று வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகாதீர். உள்ளே வந்து, உங்கள் உடையை மாற்றிக் கொள்ளுங்கள்.“ 51ஆகவே நான் தேவனை துதித்துக் கொண்டு அங்கிருந்து சென்று திரும்பவும் வருவேன். அந்த பழைய புல் வெட்டும் இயந்திரத்தின் இசையை நீங்கள் அறிவீர்கள், அதைக் கொண்டு புற்களை வெட்டும்படி திரும்பவும் வந்துவிடுவேன். உடனே ஒரு கார் உள்ளே வரும். அவர்களோடு நான் இரண்டு மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு வேறு ஒருவர் உள்ளே வருவார் அவ்வளவு தான் அந்த நாள் முழுவதும் அதிலே போய்விடும். மறுநாள் அந்த புல் மீண்டும் நல்ல உயரத்திற்கு வளர்ந்து இருக்கும். ஆகையால் நான் திரும்பவும் பின்புறத்தில் இருக்கும் புற்களை வெட்டும்படி போய் விடுவேன். நான் அங்கு போன பின்னர், என்னுடைய சட்டையைக் கழற்றுவேன். ஏனெனில் நான் பின்புறத்தில் உள்ளதால் என்னை யாரும் பார்க்க முடியாது. நான் அங்கே தொடர்ந்து புல்லைக் கத்தரித்துக் கொண்டிருந்தேன்;. அன்று வெப்பம் மிக அதிகமாக இருந்தது. நான் அங்கே வேலிவரைக்கும் கத்தரித்துப்போய்க் கொண்டிருந்தேன். அப்போது, தகைவிலான் பறவைகள் (Martin) வந்து போகிறதை பிள்ளைகள் காணும்படி ஒரு சின்ன தகைவிலானுக்கான கூண்டை அங்கே வைத்திருந்தேன். ஆனால் நடந்தது என்னவென்றால், அதிலே ஒரு கூட்டகுளவிகள் குடிபுகுந்து தங்கியிருந்தன. நான் அந்த குளவி கூட்டத்தை அடித்தவுடன்அவைகள் யாவும் கிளம்பின. நான் முழுவதும் இந்த பெரிய குளவிகளால் மூடப்பட்டிருந்தேன். அவைகள் யாவும் என்னை சுற்றிலும் பறந்து கொண்டிருந்தது. 52இப்பொழுது, இது பார்ப்பதற்கு வினோதமாக தோன்றலாம். ஓரேகான் மாகானத்தில் இருக்கும் போர்ட்லாந்து பட்டணத்திலே ஒரு வெறிபிடித்தவன் என்னை கொன்றுபோடும்படி ஓடி வந்ததை என்னுடைய புத்தகத்திலே வாசித்தீர்களா? அந்த புத்தகம் நினைவிலிருக்கிறதா? அந்த மனிதன் மேல் எனக்கு வெறுப்பு ஏதுமில்லை.அந்த மனிதன் மேல் எனக்குப் பரிதாபமும் அன்பும் மாத்திரமே இருந்தது. ஏனெனில்அவனுடைய நிலை அந்த விதானத்தில் இருந்தது. அவனுக்காக நான் வருந்தினேன். ஒருவேளை அந்த ஆவி அவன் மேல் இல்லாமல் இருந்தால், அவன் என்னை நேசித்திருப்பான். நீங்கள் உங்கள் பகைவரையும் நேசித்தாக வேண்டும். இப்பொழுது அவர்கள் ஆயத்தம் செய்கின்றதான வேளையில் நான் இந்த சின்ன காரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும். 53இந்தத் தேனீக்கள் என்னை முழுவதும் மூடிக்கொண்டது. நான் அவைகளை கண்டு அஞ்சுவதற்கு பதிலாக, அந்த குளவிகளின் மீது நான் அன்பைகொண்டிருந்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவித்தது. அது கேட்பதற்கு முட்டாள்தனமாக இருக்கும். ஆனால் அது உண்மை. “இந்த பரிதாபமான சிறு பூச்சிகள் ஒருவேளை இளைபாறும்படி தூங்கிக்கொண்டிருந்திருக்கும். நான் தான் அவைகளை தொந்தரவு செய்து விட்டேன்” என நினைத்தேன். ஆகவே தான் நான் அதை அடித்தவுடன், அவைகள், நிஜமாக களத்தில் இறங்கிவிட்டன. அவைகள் யாவும் என்னை முழுவதும் சூழ்ந்து கொண்டன. நான் என்னுடைய புல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டேன். அந்த குளவிகளை நோக்கி, என்னுடைய சிறு நண்பர்களே, நான் உங்களை தொந்தரவு செய்ததற்காக என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன். என்னை மன்னியுங்கள். நான் தேவனுடைய ஊழியக்காரன். நீங்கள் என்மேல் கோபமாயிருப்பதை குறித்து நான் வியக்கவில்லை,ஏனெனில் நான் தான் உங்களை தொந்தரவு செய்தேன். ஆனால் நான் தேவனுடைய ஊழியக்காரன். நான் அவருடைய மக்களுக்காக ஜெபித்து ஊழியம் செய்கிறவன். ஆகவே உங்களோடு விளையாடுவதற்கு இப்பொழுது எனக்கு நேரமில்லை. ஆகையால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இப்பொழுதே திரும்பி உங்களுடைய கூண்டிற்குள் வேகமாய் போய்விடுங்கள் என்றேன். இதோ, என்னுடைய வேதாகமம் இங்கே இருக்க, நான் ஒரு கிறிஸ்துவ ஊழியக்காரனாக இதை சொல்லுகிறேன். தேவன் என்னுடைய இருதயத்தை அறிவார், அந்த தேனீக்கள் என்னை இரண்டு முறை கூட்டமாய் சுற்றி வட்டமிட்டு ஒன்றின்பின் ஒன்றாக சரியாய் அந்த கூண்டுக்குள் திரும்பிசென்றுவிட்டது. ஆம், அது உண்மையே. ஒரு நாள் ஒரு பெரிய பண்ணையிலிருந்து... 54இப்பொழுது எத்தனை பேரை கொண்டிருக்கிறீர்கள்? இங்கே வரிசையில் எந்த எண் வரை இருக்கிறீர்கள்? இன்னும் அதிகமாக கொண்டிருக்கலாமா? இன்னும் அதிகமாக கொண்டிருக்க வேண்டுமா? நல்லது. கடைசி நான்கு பேரை மாத்திரம் இங்கே என்னிடத்தில் கொண்டு வாருங்கள். கடைசியாக எங்கே விட்டோம்? பதினைந்தா? நல்லது, அப்படியென்றால் இருபது வரை வரிசையில் கொண்டுவாருங்கள். அவர்கள் தங்களை வரிசைபடுத்திக் கொள்ளட்டும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இருபது வரை கொண்டு வாருங்கள். நல்லது. 55கவனியுங்கள், ஒரு நாளில் ஒரு பெரிய காளையானது என்னுடைய உயிரை எடுக்கும்படி வயல் வெளியினூடாக ஓடி வந்தது. அந்தக் காளையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள எனக்கு வழியில்லாமல் இருந்தது. நான் பயப்படுவதற்கு பதிலாக, அந்த விலங்கிற்காக வருந்தினேன். அது சில அடிதூரம் என்னை நெருங்கிவிட்டது. அது அப்போது தான், இரண்டு மாதத்திற்கு முன்பு பூர்க்ஸ் பண்ணையில் ஒரு மாநிறம் கொண்ட (Colored) மனிதனை கொன்றுபோட்டது. பிறகு நான் அதினிடத்தில் “உன்னுடைய சிருஷ்டிகரே என்னுடைய நேச இரட்சகர், நான் உன்னை தொந்தரவு செய்வதில்லை. நான் இப்பொழுது இந்த வயலைக் கடந்து என்னுடைய ஊழியத்தினிமித்தம் போய்க் கொண்டிருக்கிறேன். ஆகையால், இப்பொழுது நம்முடைய சிருஷ்டிகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நீ அங்கே சென்று அந்த மரத்தின் கீழே படு” என்றேன். அந்த காளை என்னிடத்திலிருந்து சுமார் ஐந்து அடி தூரத்தில் ஓடி வந்து நின்றது. அது பார்ப்பதற்கு தன் பெலனை இழந்து காணப்பட்டது. பின்பு அது வலது புறமும், இடது புறமும், சுற்றிப்பார்த்து அங்கிருந்து நடந்து சென்று மரத்தடியில் படுத்துக்கொண்டது. அது சரியே. அந்தக் காளைக்காக நான் வருந்தினேன். அதை நான் நேசித்தேன். அது நிச்சயமாக சரிதான். 56இப்பொழுது, அது கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றும், ஆனால் நண்பனே, நான் இதை உங்களுக்கு சொல்லட்டும். அப்போஸ்தலனாகிய பவுலுடைய கையை சர்ப்பம் கடித்த பொழுது, அவர் 'ஐயோ சீக்கிரமாக அயோடினை அல்லது விஷத்தை எடுக்கக்கூடிய மருந்து ஏதாவதொன்றை கொண்டு வாருங்கள்“ என்று சொல்லி இருப்பாரானால், அது அவரை பாதித்திருக்கும். ஆனால் அவர் பரிசுத்த ஆவியினால் முழுவதும் நிரம்பி இருந்ததினால், அதைக் கண்டபொழுது சிறிது அளவு கூட பயப்படாமல், அதை அப்படியே நெருப்பின் மேல் உதறிவிட்டு கடந்து போய்விட்டார். அது சரியே. மக்கள் பயந்து போகிறார்கள். புற்றுநோய்தாக்கும் போது, 'ஓ நான் இறந்துவிடுவேன் என மருத்துவர் கூறிவிட்டார்“ என்ற காரியம் அவர்களை பிடித்துக்கொள்கிறது. அது தான் உங்களை மரிக்கச் செய்கிறது. நீங்கள், ”நான் கர்த்தராகிய இயேசுவின் ஊழியக்காரன், இங்கிருந்து கடந்துவெளியே போ. என்னை பிடித்துக்கொள்வதற்கு உனக்கு எந்த அதிகாரமும் இல்லை“ என்று சொல்லுங்கள். இதை உங்கள் இருதயத்திலிருந்து உணர்ந்தவர்களாய் சொல்லுங்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என கவனியுங்கள். நீங்கள் அதை பாவனை செய்து நடிக்க முடியாது. நீங்கள் அதை பெற்றாக வேண்டும். ஒரு வேடனாக, காடுகளுக்குள்ளே, எத்தனை முறை நான் பயங்கரமான மிருகங்களை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறேன். அவைகளை அப்படியே அங்கு நின்றுகொண்டு சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருப்பேன், அவைகள் அப்படியே திரும்பி சாலையின் ஓரமாக நடந்து போய்விடும். அது சரியே. நீங்கள் பயப்படுவீர்களானால் அதை முயற்சிக்க வேண்டாம். ஆனால் நீங்கள் பயப்படவில்லையெனில், தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள். இன்றிரவு நீங்கள் பயப்படுவீர்களானால், தேவனை நம்ப நீங்கள் முயற்சிக்க வேண்டாம். நீங்கள் திரும்பவும் மருத்துவரிடத்தில் சென்று அவர் உங்களுக்கு என்ன செய்யகூடும் என்று அவரை கேட்டுக்கொள்வது உங்களுக்கு சிறந்ததாயிருக்கும். ஆனால் நீங்கள் பயப்படாதவராய் அவரை நேசிப்பீர்களானால், அவரை அப்படியே இன்று இரவு ஏற்றுக்கொள்ளுங்கள், பின்பு என்ன நடக்கிறது என பாருங்கள், அவர் கண்டிப்பாக செய்வார். அது சரியே. 57இப்பொழுது எல்லோரும் பயபக்தியுடன் இருங்கள். இசை இசைத்துக் கொண்டிருக்க நாம் சற்று ஜெபிக்கலாம்: பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் வருகிறோம். இன்றிரவு, இந்த மக்கள் மேடைக்கு வருவதற்கு முன்னமே அவர்களை சந்திக்கும் பொழுது, நான் ஏன் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஆண்டவரே உம்முடைய கிருபையினாலே, இப்பொழுது எனக்கு உதவி செய்வீராக. மற்றும் இந்த ஆராதனைக்காக என்னை அபிஷேகிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். ஏனெனில் இங்கு நூற்றுக்கணக்கானோர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்றிரவு தாமே அவர்களுக்கு இது திருப்புமுனையின் நாளாக இருக்கட்டும். மற்றும் மகத்தான ஆசீர்வாதம் அவர்களைப் பின்தொடர்வதாக. இதை தேவனுடைய மகிமைக்கென்று, அவருடைய குமாரன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன் ஆமென். 58சரி, நண்பர்களே, நான் இங்கே இருக்கிற இந்த ஸ்திரியுடன் ஒரு வேளை சற்று பேச வேண்டியிருக்கும். வழக்கமாக நான் ஜெபிக்க தொடங்கினவுடனே பரிசுத்த ஆவியானவர் முன்பாகவே அருகில் வந்திருப்பார். ஆனால் நான் இந்த மேடைக்கு வருவதற்கு முன் நண்பர்களை சந்தித்ததினால் சிறிது தொந்தரவுக்குள்ளாயிருக்கிறேன். ஆகையால் அவர் என்ன செய்வார் என கண்டறிய சில நிமிடம் உங்களிடம் பேச போகிறேன். நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். உண்மையிலே நீங்களும் நானும் அந்நியர்கள்? இருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இருவரையும் அறிந்திருக்கிறார், அறிந்திருக்கவில்லையா?அவர் நம் இருவரையும்அறிந்திருக்கிறார், மற்றும் அவர் நமக்கு ஏதாகிலும் செய்வார் என நான் நம்புகிறேன். சபையாரிடம் இதை கேட்கிறேன். யாருக்காவது இந்த ஸ்திரீயைத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? இக்கூட்டத்தில் இவர்களை அறிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சரி நல்லது. 59இப்பொழுது, அவர்களைக் குறித்து எனக்குத் தெரியாது. என்னுடைய வாழ்க்கையில் இதுவே நான் அவர்களை முதல் முறை சந்திக்கிறேன் என்று தேவன் அறிவார். ஆனால் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தாரானால், நாம் இந்த சுவிசேஷத்தை எடுத்து சரியாக வேதத்தில் பொறுத்திப் பார்க்கலாம். இப்பொழுது அவர் இந்த ஸ்திரீக்கு என்ன செய்திருப்பார்? அவர்கள் சுகவீனமாய் இருக்கிறதினால், ஏன், அவர்களிடத்தில், “கல்வாரியில் மரித்த போது அங்கேயே அவர்களை சுகமாக்கினேன்” என கூறியிருப்பார். ஆனால் இப்பொழுதோ அவளிடத்தில் என்ன குறை இருக்கிறது என்று கண்டறிய, கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயுடன் பேசினதுப் போலவே ஒரு சில நிமிடங்கள் இவர்களோடு பேசக்கூடும். பிறகு அவளிடத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பார். அதன் பிறகு அவளுடைய தவறு என்ன என்று கூறுவார், அல்லது அவளுக்கு என்ன வேண்டுமோ அல்லது அதுபோல் ஏதாவது ஒன்றை சொல்லுவார். அது அப்படி நடந்தால் அது நேற்று இருந்த அதே இயேசுவாக இன்றைக்கும் இருக்கும். அதுசரிதானே? அந்த விதமாகத்தான் வேதம் அவரைக் குறித்து கூறுகிறது. அந்த விதமாக தான் இன்றைக்கும் இயேசு இருப்பார். இப்பொழுது நாம் அவருடைய ஊழியக்காரர்களாய் இருக்கிறோம். இப்பொழுது நம்முடைய சொந்த எண்ணங்கள் நமக்கு எதுவும் இல்லாத அளவிற்கு நம்மை பரிபூரணமாக ஒப்புக்கொடுத்து, பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பயன்படுத்தும் பட்சத்தில், அவர் அதே காரியத்தைச் செய்யக்கூடும். அவர் அப்படி செய்தால், அது நல்லது தான். நான் அவரை அப்படி செய்ய வைக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அவர் வந்து அபிஷேகத்தை கொடுப்பாரானால், ஏன், அவர் நிச்சயமாகவே அதைச் செய்வார். அதை குறித்து நான் நிச்சயமுடையவனாக இருக்கிறேன். இப்பொழுது, இது ஒரு அழகான பட்டணம், இல்லையா? அற்புதமான பெரிய பட்டணம். ஆனால் இந்த பட்டணத்திற்கு நிச்சயமாகவே பண்டையகால எழுப்புதல் தேவை. ஒவ்வொரு பட்டணத்திற்கும் அது தேவை. அது சரி. ஒவ்வொரு பட்டணத்திற்கும் அது தேவை. 60இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இங்கு இருக்கிறார். இங்கு ஏதோ ஒன்று நடந்ததென்று உனக்குத் தெரியும். நீ உன்னுடைய சரீரத்தின் நிலைமையின் நிமித்தம் என்னை பார்க்கும்படி வந்திருக்கிறாய். உனக்கு ஒரு அறுவைசிகிச்சை நடக்கவேண்டியிருக்கிறது. அது உன்னுடைய உடம்பில் உள்ள ஒரு கட்டி (Tumor). அது உன்னுடைய வயிற்றுப் பகுதியில் உள்ளது. உன்னுடைய தொல்லை உன் வயிற்றில் உள்ளது, அந்த கட்டிதான் உனக்கு வீக்கத்தைக் கொடுக்கிறது. அது தான் காரியம். அது உண்மையே. இப்பொழுது வேதம் சத்தியம் என்று உங்களுக்கு நான் சொன்னதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? அவர் உங்களுக்கு என்ன சொல்லப்போகிறார் என்று பார்க்க நான் உங்களோடு சிறிது நேரம் கூடுதலாக பேசப்போகிறேன். பாருங்கள், இங்கு உள்ள கூட்டத்தினருக்காக சற்று நேரம் கூடுதலாக பேசப் போகிறேன். இப்பொழுது உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் உங்களிடத்தில் என்ன தவறு உண்டு என்பதை அவர் அறிவார். இப்பொழுது நீங்கள் ஏதோ வித்தியாசமாக உணருகிறீர்கள். அது அவருடைய பிரசன்னத்தில் இருக்கக்கூடிய உணர்வு. அது சரிதானே? இப்பொழுது ஏதோ ஒன்று இருக்கிறது. நீங்கள் நேசித்த ஒருவரை அல்லது யாரோ ஒருவரை விட்டு வந்திருப்பதை நான் காண்கிறேன். அவர் உன்னுடைய கணவர், அவருக்கு ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது, அது பக்கவாதம். உன்னுடைய கணவனுக்குப் பக்கவாதம் இருக்கிறது. அது சரிதானே? இது சரியே. நீங்கள் உங்களுடைய வீட்டிற்குச்சென்று அவர் மேல் கையை வைத்து, அந்த வியாதியிலிருந்து அவர் வெளியே வந்து சுகமாக விரும்புகிறீர்களா? இங்கே வாருங்கள். அன்பான தேவனே, எங்கள் பிதாவே உம்முடைய ஆவி இந்த ஸ்திரீயின் மீது தங்கி இருப்பதாக. அவள் சுகமடைவாளாக மற்றும் அவளுடைய இருதயத்தின் வாஞ்சையானது அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கட்டும். இந்த ஆசீர்வாதத்தை உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கிறேன். ஆமென். 61ஸ்திரீயே நான் மறுபடியும் உன்னோடு சற்று பேச விரும்புகிறேன். பேசின காரியங்கள் எல்லாம் எனக்கு ஒரு கணவை போல் மாறிவிட்டது. நான் உன்னிடத்தில் இதை கேட்க விரும்புகிறேன். காரியம் எப்படி இருந்தாலும் சரி அது அவருக்கு ஒன்றுமில்லை என்று நீ அறிவாய். இப்பொழுது நான் சொல்ல வருகிறதை என்னால் என்னுடைய ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனால் எதுவாயிருந்தாலும் சந்தேகத்தின் நிழல் கொஞ்சம் கூட இல்லாமல் அது சத்தியமே. அது உண்மை தானா? அது முற்றிலும் உண்மையே. மேலும் உன்னுடைய ஆவியை நான் தொடர்புக் கொண்ட போது, அதே சமயத்தில், ஏதோ ஒன்று உன்னை அபிஷேகித்து கொண்டிருந்ததை நான் கண்டேன். அது சரிதானா? சரி. இப்பொழுது நீ அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் என்று விசுவாசிப்பாயானால், அவரால் அபிஷேகிக்கப்பட்ட ஊழியக்காரனாகிய நான், என் மேல் அந்த அபிஷேகம் இருக்கையில், என் கையை உன் மேல் வைக்கும் பொழுது நீ எதை கேட்டாயோ அதை பெற்றுக்கொள்ளவேண்டும். அது சரிதானே? அதை நீ விசுவாசிக்கிறாய். அப்படியென்றால் நீ எதை கேட்கிறாயோ அதை பெற்றுக் கொள்வாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாராக. இப்பொழுது தேவன் மேல் நம்பிக்கைக் கொண்டிருங்கள். சந்தேகப்பட வேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும், முழுச் சிந்தையோடும் அவரை விசுவாசியுங்கள். இங்கே கூட்டத்தில் இருப்பவர்களில் எத்தனைப் பேருக்கு இன்னும் ஜெப அட்டை இல்லை? உங்கள் கைகளை உயர்த்துங்கள். அதினால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும் நீங்கள் சுகத்தை பெற விரும்புகிறீர்கள் என்று எனக்கு ஒரு பொதுவான எண்ணம் கிடைக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. வெறுமனே விசுவாசியுங்கள். நீங்கள் எதைக் கேட்பீர்களோ அதைபெற்றுக் கொள்வீர்கள். சரி, அந்த மனிதனை அனுப்புங்கள். மாலை வணக்கம் ஐயா. நீங்கள் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் இல்லையா? அவரே ஜீவிக்கிற தேவனுடைய குமாரன். மற்றும் அவரே நம்முடைய மீட்பரும் நம்மை சுகமளிக்கிறவருமாய் இருக்கிறார். இப்பொழுது அவர் இந்த பூமியிலிருந்து, எனக்குக் கொடுத்த இந்த ஆடைகளை அணிந்து உன்னுடன் சிறிது நேரம் பேசுவாரானால், அவர் உன்னுடைய தொல்லையை அறிந்திருப்பார். நான் மக்களின் மனதைப்படிக்கிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். அது முற்றிலும் தவறு. ஐயா நீர் இங்கு வந்து உங்களுடைய கைகளை என்னுடைய தோள்ப்பட்டை மேல் வையுங்கள். அவர் உங்களை தொடர்புகொள்ளும்படியாக வையுங்கள். “வியாதியஸ்தர்கள் மேல் அவர்கள் கைகளை வைப்பார்கள்” என்று இயேசு கூறின வண்ணமாக உங்களை அவர் தொடர்பு கொள்ளச் செய்யுங்கள். 62இப்பொழுது கர்த்தராகிய இயேசு எனக்கு ஒரு தரிசனத்தை காண்பித்து, அதை என்னிடம் சொல்லி, உங்களுடன் அந்தத்தரிசனம் பேசி, அவர் அவ்விதமான தரிசனத்தை எனக்குக் கொடுக்கும் பட்சத்தில் அது நடைபெற்றால், அது சரியா இல்லையா என்று உங்களுடைய தலையை அசைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் அங்கிருந்து வரும்பொழுது நான் மனிதர்களின் மனதை படிக்கிறேன் என்று நினைத்தீர்கள். இல்லை ஐயா, நான் அப்படி இல்லை. நான் மனதை படிக்கிறதில்லை. இப்பொழுது இயேசு கிறிஸ்து மனதை வாசிக்கிறவராய் இருந்தார் என்று சொன்னால் எப்படி இருக்கும்? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? அவர் உண்மையிலே அப்படிதான் இருந்தார். அவர், அவர்களுடைய எண்ணங்களை அறிந்தார். அது சரிதானே? இப்பொழுது உங்களால் “எண்ணங்கள் அறிதலுக்கும்” “மக்களின் மனதை படிப்பதற்கும”; உள்ள வித்தியாசத்தை கூற முடியுமானால்... இதோ இது இங்கு இருக்கின்ற மனதை படிப்பவர்கள் போன்று அல்ல. அவர்கள் பிசாசைக் கொண்டுசெய்கிறார்கள். அது பிசாசு. இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து அவன் அந்தக் காரியத்தைப் பிடித்துக் கொண்டு பாவனை செய்கிறான். இப்பொழுது இந்த மனிதன் என்னுடைய தோளின் மேல் கையை வைத்திருக்க, சரியாக எனக்குமுன் ஏதோ ஒன்று நகர்கிறதை நான் காண்கிறேன். அது வெண்மையாக மாறிக் கொண்டிருக்கிறது. நான் ஒரு வாலிபன் நிற்கிறதைக் காண்கிறேன். அவன் திடமான வாலிபன். அந்த மனிதன் ஏதோஒரு தவறைச் செய்கிறான். அது பொல்லாங்கான காரியம். அதற்கான கிரயத்தை அவன்செலுத்திவிட்டான். அந்த மனிதன் சமூக நோயினால் பிடிக்கப்பட்டான். அது அவனுடையஜீவியத்தையே கெடுத்துப் போட்டது. அந்த மனிதனுக்கு வயதான போதிலும் கூட அவனை அது தொடர்ந்து பாதித்தது. அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். அவன் மிகவும் மோசமான நிலைக்குள்ளானான். இப்பொழுது அவன் மிகவும் மனோரீதியாக தொல்லைக்குள்ளானான். அவன் பாவ மன்னிப்புக்கென்ற எல்லையையே கடந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டான். ஐயா, அந்தகாரியங்களெல்லாம் உண்மையே. அது சரியென்றால் உங்களுடைய கரத்தை இந்த ஜனங்களுக்கு முன்பாக உயர்த்துங்கள். அவர்கள் அதை உண்மை என்று காணட்டும். 63இப்பொழுதாவது நீங்கள் இதை அறிவீர்களா? அது என்னவாயிருந்தாலும் சரி, தேவன் உங்களுடைய ஜீவியத்தை அறிவார். உங்களுடைய ஜீவியத்தில் என்ன நடந்ததோ அதை அவர் அறிவார். மற்றும் நீ என்னவாயிருப்பாயோ, அதையும் அவர் அறிவார். அது சரிதானே ஐயா? இப்பொழுது அவர் அதை எடுத்துவிடுவார் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவருடைய பிரசன்னத்திலே இருக்கிறீர்கள்.இது ஒரு வேளை உங்களுடைய ஜீவிய நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு நெருக்கமாக இருக்கக்கூடும். இப்பொழுது நான் என் கரங்களை உங்கள் மேல் வைத்து, மீதமுள்ள கூட்டத்தாரோடே சேர்ந்து கேட்கும் போது, இயேசு கிறிஸ்து உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை தருவார் என விசுவாசிக்கிறீர்களா? இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, அழியக்கூடிய இந்த மனித உதடுகள் அசைந்து “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று சொல்லும் போது, அது அவருடைய உள்ளத்தின் (ஆத்துமாவின்)ஆழத்திலிருந்து வருகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் இந்த பொல்லாங்கான வியாதி அவருடைய சரீரத்தை விட்டுப் போகும்படி கேட்கிறேன். அவர் தாமே தேவகுமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே முழுமையாய் சுகத்தைப் பெறுவாராக. ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என் சகோதரனே. தேவ சமாதானம் உங்ளோடு இருப்பதாக. கடந்து போங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி ஐயா. அவர் உங்களுக்கும் அதை செய்வார் என நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 64ஒரு நிமிடம் பொருங்கள் ஐயா. ஒரு பொல்லாத ஆவி இந்த மனிதனை விட்டு கடந்து போனது மற்றும் அது வேறு இடத்திலிருந்து எழும்புகிறதை கண்டேன். அது... ஓ, இரக்கமுள்ள பரலோகப் பிதாவே நீர் எல்லாவற்றையும்அறிந்திருக்கிறீர். ஸ்திரீயே, உன்னுடைய விசுவாசமே உன்னை இரட்சித்தது. அங்கே அமர்ந்து கண்களின் கண்ணீரை கசக்கிக்கொண்டிருக்கிறவளே, அது நீ தான். நீ மிகவும் நரம்புத் தளர்ச்சியால் உடைந்து போயிருக்கிறாய். மற்றும் சாத்தான் உனக்கு ஒரு பொய்யை கூறியிருக்கிறான். நீ மன்னிக்க முடியாத தவறை செய்ததினால் நீ மன்னிக்கப்படவே முடியாது என்று சாத்தான் உன்னிடத்தில் கூறியிருக்கிறான். சகோதரியே, உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை முழுமையாய் சுகமாக்கினார். உன் கால்களால் எழுந்து நின்று, அதை இப்பொழுது ஏற்றுக்கொள். அது கர்த்தருடைய ஆசீர்வாதங்கள். எழுந்து நின்று உன் கரங்களை உயர்த்தி கர்த்தருக்குத் துதி செலுத்து. இந்த மனிதனிடத்திலும் அதே போல் தவறு இருக்கிறதா? அதே தவறா? தேவன் அதை அப்படியே விட்டுவிடுவார் என சாத்தான் நினைத்தான். ஆனால் அவனால் அங்கேயே இருக்க முடியாமல் போயிற்று. நீங்கள் இருவரும் விடுவிக்கப்பட்டீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் களிகூர்ந்து உங்களுடைய வழியில் செல்லுங்கள். கர்த்தருடைய தூதனானவர்; இருவர் பக்கத்திலும் நின்றுக்கொண்டிருக்கிறார். தேவன் தாமே ஆசீர்வதிக்கப்படுவாராக துதிக்கப்படுவாராக. 65அந்த ஸ்திரீயை பிடித்துக்கொண்டிருக்கும் தாயாரே, உங்களைத் தான். உங்களுடைய நண்பர் சுகமானதினால் நீங்கள் மிகவும் களிகூறுகிறீர்கள். நீங்கள் அந்த ஸ்திரீயை நேசிக்கிறீர்களா? நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய கரங்களை அவர்கள் மேல் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு மூட்டுவாதம் இருந்தது. சரியா? இனிமேல் நீங்கள் அதை கொண்டிருக்கப்போவதில்லை. உங்களுடைய விசுவாசம் உங்களை இரட்சித்தது. நீங்கள் மகிழ்ந்து களிகூர்ந்து உங்களுடைய வழியில் செல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். தேவன் மேல் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாமல் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். இன்னும் கர்த்தருடைய தூதனானவர் அங்கே நின்றுக் கொண்டிருக்கிறார். அவர் சரியாக உங்களுக்குப் பின்னாக அமர்ந்திருக்கும் ஒரு சகோதரியின் மேல் இருக்கிறார். நீங்கள் சூரிய தாக்குதலினாலே பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். வெப்பம் அதிகமாக இருந்ததினால் நீங்கள் தாக்கப்பட்டு கீழே விழுந்தீர்கள். அதினாலே அதிகமான விளைவுகளை சந்தித்து வருகிறீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். சகோதரியே, உங்களுடைய விசுவாசம் அவரைத் தொட்டது. “உன்னுடைய உதிரப்போக்கு நின்று விட்டது” என்று அந்த ஸ்திரீயினிடத்தில் சொன்ன அதே கர்த்தராகிய இயேசு இப்பொழுது சொல்கிறார் அந்த சூரிய தாக்குதல் உன்னை விட்டு அகன்றுப்போனது. நீங்கள் வீட்டிற்குச் சென்று குணமாகுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவருடைய மகிமைக்காக எழுந்து நின்று அவருக்குத் துதி செலுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அல்லேலூயா. 66ஓ. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை நீங்கள் எப்படி சந்தேகிக்க முடியும்? அப்படி செய்வது பாவமாயிருக்கும். நான் உங்களுடைய விசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். நான் கர்த்தருடைய தூதனைக் குறித்துக்கூறும் சாட்சியை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே விசுவாசியுங்கள். நான் சொல்வதை விசுவாசியுங்கள். நான் குழந்தையாக இருந்த பொழுது, நான் பிறந்த அந்த நிமிடத்திலே அக்கினி ஸ்தம்பமாகிய அவர், குழந்தைப்படுக்கையின் மேல் தொங்கிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு நான் கண்டதரிசனமே என் நினைவிற்கு வரகூடிய முதல் காரியமாக இருக்கிறது. அப்போது ஒரு மனுஷன் வெள்ளை நிற ஆடையை உடுத்தினதைப் போன்று என் அருகே நின்று கொண்டிருந்தார். அவர் வெள்ளை அங்கியோடும் அவருடைய தலைமுடி நீளமாக தொங்கிக் கொண்டிருந்தன. அவர் என்னிடத்தில், நான் வியாதிபட்டவர்களுக்காக ஜெபிக்கவேண்டுமென்று சொன்னார். மற்றும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி இந்த வரமானது தேவனுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். நான் வியாதிப்பட்டவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் இதை விசுவாசிக்கும்படி உங்களை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். அப்பொழுது நீங்கள் முழுமையாய் சுகத்தை பெறுவீர்கள். ஆம் ஐயா, அது ஒரு தைரியமான சவால். 67ஐயா, உங்களை குறித்து என்ன? அதோ அங்கே வெள்ளை நிற சட்டையை அணிந்து, காலரை திறந்துவிட்டு, மிக உத்தமமாய் என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறவரே? உங்களைத் தான் ஐயா? நீங்கள் தான். நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? உங்களிடத்தில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள்? உங்களுக்கு இருதயக் கோளாறு இருந்தது, ஆனால் இனிமேல் நீங்கள் அதை கொண்டிருக்கப் போவதில்லை. உங்களுடைய விசுவாசம் அவரைத் தொட்டது. நீங்கள் யாரோ ஒருவர் மேல் அக்கரையுள்ளவராயிருக்கிறீர்கள். அது உங்களுடைய மனைவி. அவர்கள் சரியாக உங்களுக்கு பின்பாக அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் நரம்புத் தளர்ச்சியினால் அவதிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வப்பொழுது இருதயக் கோளாரும் இருக்கிறது என நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வயிறு அந்த நரம்பை அழுத்துகிறதே அதற்கு காரணம்.அவர்களும் சுகமானார்கள். ஆகையால் நீங்கள் இருவரும் வீடு சென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே பூரணமாகுங்கள். ஜீவனுள்ள தேவனுக்கே துதி உண்டாவதாக. நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? அவருடைய அபிஷேகம் இங்கு இருக்கிறது. அவருடைய அபிஷேகம் உங்களுடனும் இருக்கிறது. நீங்கள் ஒரு விசுவாசி. நீங்கள் இதற்கு முன்பு என்னுடைய கூட்டங்களில் ஒருமுறை சுகத்தை பெற்றீர்கள். உங்களை எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் தேவன் அதை அறிவார். மார்பகத்தின் மேல் ஏதோ ஒன்று இருந்தது. அங்கே கட்டிகள் இருந்தன. அது ஒரு விதமான நீர் கட்டியைப்போன்று இருந்தது. மற்றும் உங்களுடைய தொண்டை பகுதியில் ஏதோ கோளாறு இருந்தது.நீங்கள் சுகமடைந்தீர்கள். அவைகள் எல்லாம் போய்விட்டன. உங்களுக்கு மற்றொரு கட்டியானது வயிற்றிலே அல்லது அதற்குக் கீழே ஒரு இடத்தில் வந்திருக்கிறது. அதிலிருந்தும் தேவன் உங்களை இப்பொழுது சுகப்படுத்தினார். ஆகையால் உங்களுடைய வழியில் சென்று மகிழ்ந்து பூரணமாகலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே துதியுண்டாவதாக. அல்லேலூயா. 68ஜீவனுள்ள தேவனுடைய இரக்கத்திற்கும், நன்மைகளுக்கும் நாம் அவரை எப்படியாக துதிக்கவேண்டும். பயபக்தியோடே இருங்கள். உங்களுடைய முழு இருதயத்தோடே விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் வேண்டிக்கொள்ளுவது எதுவோ அதைப் பெற்றுக்கொள்வீர்கள். நான் அவருடைய ஊழியக்காரன் என்று உங்களுடைய முழுஇருதயத்தோடு, விசுவாசிக்கிறீர்களா? கவனியுங்கள், சில நேரங்களில் நீங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து நகர்ந்து செல்லும்படி முயற்சி செய்கிறதை நான் காண்கிறேன். அது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. உங்களுக்கு மூட்டு வாதம் இருக்கிறது. அது சரிதானே. உங்களுக்கு ஒரு சகோதரன் இருக்கிறான். நீங்கள் அவன் மேல்அக்கரையுள்ளவராக இருக்கிறீர்கள். அப்படித்தானே? அவருக்குப் புற்று நோய் இருக்கிறது. நீங்கள் சுகமானீர்கள். நீங்கள் போய் அவர் மேல் கைகளை வையுங்கள், அப்போது அவர் சுகமடைவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வாயாக. 69நீ என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? நீங்கள் சுகத்தைபெற்று அங்கே அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது உங்களுடைய பேரப்பிள்ளை சுகம் பெற வேண்டுமென்று விரும்புகிறீர்கள். மற்றும் அவனிடத்தில் என்ன குறை இருக்கிறது என்று நான் கூறட்டும். அந்த தொல்லை அவனுடைய வாயில் இருக்கிறது. மருத்துவர்கள் அவனுடைய வாயினுள் பார்த்தபோது, அவனுடைய வாயின் மேல்பாகம் இல்லாமல் இருக்கிறதை நான் காண்கிறேன். அது சரிதானே? நீங்கள் போய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுடைய கரங்களை அவன் மேல் வையுங்கள். ஸ்திரீயே, நீ அந்த வயிற்று தொல்லையில் இருந்து விடுபட விரும்புகிறாயா? நீ உன்னுடைய இரவு ஆகாரத்தை சாப்பிட வேண்டுமா? நீ இயேசுவையே உன்னுடைய சுகம் அளிக்கிறவராக ஏற்றுக் கொள்கிறாயா? அப்படியானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ சென்று உன்னுடைய இரவு ஆகாரத்தை சாப்பிடு. வாருங்கள் ஸ்திரீயே, நீ உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறாயா? நீ அந்த சிறுநீரக கோளாறிலிருந்து விடுவிக்கப்பட்டு பூரணமடைய வேண்டுமென்று விரும்புகிறாய். அது அனேக நாட்களுக்கு முன் உன்னை பிடித்தது. அவர் உன்னை சுகப்படுத்துவார் என நீ விசுவாசிக்கிறாயா? இப்பொழுது அவருடைய அபிஷேகம் இங்கே இருக்கையில், நான் என் கரங்களை உன் மேல் வைக்கும் போது, நீ உன்னுடைய ஜீவியத்தை மறைக்க வேண்டுமென்று நினைத்தாலும், மறைக்க முடியாது. ஏனெனில் அவர் உன்னை அறிவார். இருந்தாலும் அவர் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா?. அவர் அதை செய்தார். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நம்முடைய சகோதரிக்கு அது உறுதிப்படுத்தப்படட்டும். நல்லது. 70நீங்கள் அந்த சரீர விறைப்பிலிருந்தும், முடக்கு வாதத்திலிருந்தும் மற்றும் உங்கள் சரீரத்திலுள்ள அனைத்து வியாதிகளிலிருந்தும் விடுபட வேண்டுமென்று விரும்புகிறீர்கள். நாங்கள் இப்பொழுது இயேசுவை கேட்கும் போது அவர் உங்களைசுகமாக்குவார் என விசுவாசிக்கிறீர்களா? கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த ஸ்திரீசுகமடைவார்களாக. இதை தேவனுடைய மகிமைக்கென்று கேட்கிறோம் ஆமென். இப்பொழுது, சகோதரியே சந்தோஷத்துடன் செல்லுங்கள். மகிழ்ச்சியாய்ச் செல்லுங்கள். உங்களுடைய விசுவாசம் இன்னும் அதிகமாக உயர்ந்து கட்டப்படட்டும். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 71சீமாட்டியே உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? உங்களிடத்தில் என்ன குறை இருக்கிறது என்று அவர் எனக்குக் கூறினால் நீங்கள் இயேசுவையே உங்களுடைய சுகம் அளிப்பவராக ஏற்றுக்கொள்வீர்களா? உங்களுக்கு ஏதோ ஒரு விதமான தொல்லை இருக்கிறது. நீங்கள் எப்பொழுதும் அதிகமாய் இரும்மிக்கொண்டு இருக்கிறீர்கள். அது ஆஸ்துமா நிலை. உங்களுக்கு நரம்புத் தளர்ச்சியும் இருக்கிறது. இயேசு உங்களை சுகப்படுத்தப் போகிறார் என விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகத்தைப்பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென். நல்லது. வாருங்கள் ஸ்திரீயே, உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அந்த இரத்தசோகை நிலையிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள் அல்லவா? உங்களைப் பார்ப்பதற்கு இரத்த சோகை இருக்கிறதைப் போன்று தோன்றவில்லை. ஏனெனில், நம் இருவருக்கும் மத்தியில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறதினால் வெண்மையாய் காணப்படுகிறீர்கள். இப்பொழுது விசுவாசத்தினால் நீங்கள் கல்வாரிக்குச் சென்று இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து இரத்தத்தை பரிமாற்றம் செய்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே குணமாகுங்கள். அது அப்படியே ஆகட்டும். அல்லேலூயா. 72சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி நிலை உண்டாயிருக்கிறது. மேலும் உங்களுக்கு வயிற்று பிரச்சனையும் உண்டு. அது உங்களை தொல்லைப்படுத்துகிறது. உங்களுடைய நரம்பு தளர்ச்சியே உங்களுடைய வயிற்றையும் தொல்லைக்குள்ளாக்கினது. அதுவே உங்களுடைய வயிற்றுப்புண்வர காரணமாயிற்று. நீங்கள் ஏப்பம் விடும்போது உணவு மேலே வருகிறது. அதினால் உங்களுக்கு எரிச்சல் உணர்வு அதிகமாகிறது. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். இப்பொழுது நான் என்னுடைய கரங்களை உங்கள் மேல் வைத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த பிசாசை கடிந்து கொள்கிறேன். நீங்கள், உங்கள் வழியிலே களிகூர்ந்து தேவனைத் துதித்துகொண்டுச் செல்லுங்கள். நீங்கள் இனிமேல் குழந்தை ஆகாரம் போன்றவைகளை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் குணமடைவீர்கள். தேவனுக்கே துதி உண்டாவதாக என்று சொல்லுவோம். நீங்கள் அங்கே நடந்து போனபோது, தேவன் உங்களை சுகப்படுத்தினார் என்று விசுவாசிக்கிறீர்கள். அது... சரியாக அது தான் நடந்தது. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். அந்த கட்டிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று விசுவாசிக்கிறீர்களா? அங்கிருந்து அதை தேவன் எடுத்துவிட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய மகிமைக்கென்று உங்களுடைய வழியில் மகிழ்ந்து சென்று குணமாகுங்கள். நான் அவர்களுக்கு சொன்ன அதே நேரத்தில் ஒரு விளங்க முடியாத உணர்வு உங்களை தாக்கியிருக்கிறது. உங்களுக்கும் அதே கட்டி தான். நீங்கள் உங்களுடைய வழியில் சென்று குணமாகுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். அல்லேலூயா! 73நீ உன்னுடைய வயிற்றுப் பிரச்சனையிலிருந்து விடுபட்டு உன் இரவு ஆகாரத்தை சாப்பிடவேண்டும் என்று விரும்புகிறாய். ஏனெனில் உன்னால் அநேக நாட்களாக அப்படி சாப்பிட முடியாமல் போனது. நீ போய் உன்னுடைய ஆகாரத்தைப் புசி, அந்த வயிற்றுப்பிரச்சனை உன்னை விட்டு சென்றுவிட்டது. நீ குணமானாய். சகோதரியே, உனக்குள் இருக்கும் புற்று நோயை இயேசு கிறிஸ்து எடுக்காமல் போனால் நீங்கள் மரிப்பீர்கள். ஆனால் அவர் அதை இப்பொழுது எடுப்பார் என விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய வழியில் சந்தோஷத்துடன் சென்று குணமாகுங்கள். அல்லேலூயா. நீங்கள் ஒருவேளை என்னை பைத்தியக்காரன் என நினைக்கலாம். ஆனால் நான் பைத்தியக்காரன் அல்ல. அதோஅந்த ஸ்திரீ களிகூர்ந்து, அங்கே போகிறார்கள். சந்தோஷமாகப் போகிறார்கள். 74நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஐயா? உங்களை எந்த நேரத்திலும் கிழிக்கக்கூடிய அந்த வீக்கத்திலிருந்து குணமடைய விரும்புகிறீர்கள். அதோ அங்கே பின்னாக அமர்ந்து இருக்கிறவரே, ஆம், ஐயா, நீங்கள் தான். தேவன் உங்களை சுகப்படுத்தினார். நீங்கள் அதை விசுவாசித்தால், உங்கள் கால்களில் எழுந்து நின்று அதை இப்பொழுதே ஏற்றுக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதோ இரண்டாவது நபராக, அங்கே பின்னால் இருக்கிறவரே நீங்கள் இருதய கோளாரோடு இருக்கிறீர்கள். நீங்கள் அதிலிருந்து மீண்டு வர விரும்புகிறீர்கள். அதோ அங்கே இருக்கிறவரே அது சரியா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால் தேவன் உங்களை குணமாக்குவார். உங்களுக்கு அடுத்ததாக அமர்ந்து இருக்கும் ஸ்திரீக்கு மூட்டுவாதம் இருக்கிறது. ஆம் நீங்கள் தான். அவள் மேல் உங்களுடைய கரங்களை வையுங்கள். அவள் தாமே சுகத்தை பெற்றுக் கொள்வார்களாக. தேவன் அதை ஆசீர்வதிப்பார். அதை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதோ அங்கே உயர் இரத்த அழுத்தத்தோடு இருக்கும் ஸ்திரீயே? அதோ அங்கே இருக்கிறவர்களே நீங்கள் தான். நான் உங்களோடு தான் பேசுகிறேன். நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தோடு அமர்ந்து இருக்கிறீர்கள். நீங்கள் கலப்பினமான பாஷையுடையவர்கள். ஜெர்மன் மொழியை பேசுகிறவர்கள். நீங்கள் ஜெர்மன் மொழியையும் பேசுவீர்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து, எழும்பி இயேசு கிறிஸ்துவிற்குள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். 75நீங்கள் வயிற்றுப் பிரச்சனையிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா? நீங்கள் போய் உங்கள் இரவு ஆகாரத்தைச் சாப்பிடுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று இரவு ஆகாரத்தைச் சாப்பிடுங்கள். நீங்கள் யாவரும் இந்த மணிவேளையில் சுகமடைய விரும்புகிறீர்களா? அப்படியானால்,உங்களுடைய கால்களில் எழுந்து நின்று, என்னுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்களுடைய சொந்த சுகமளிக்கிறவராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது அவர் உங்களை சுகமாக்குவார். ஓ தேவனே, இந்த கூட்டத்தார் மேல் இரக்கமாயிரும் பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த இடத்தை இப்பொழுது எரிகிற அக்கினியால் நிரப்புவாராக. மற்றும் தேவாலயத்தை சாலமோன் பிரதிஷ்டை செய்த பொழுது பரிசுத்த ஆவியின் புகை உள்ளே வந்ததைப்போன்று இங்கே நிரப்பட்டும். மேலும் தேவ வல்லமையானது இந்த மக்கள் மீது பிரவாகித்துவரட்டும். வியாதியஸ்தர்கள் தாமே இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த மணி வேளையிலே சுகமடைவார்களாக.